மும்பை, நவ. 1- மினி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பை தொடர்ந்து 2021 மினி கூப்பர் எஸ்.இ. மாடல் முன்பதிவு துவங்கி உள் ளது. வாடிக்கையாளர்கள் மினி இந்தியா வலைதளத் தில் புதிய கூப்பர் எஸ்.இ. மாடலை முன்பதிவு செய் யலாம். முன்பதிவு கட்ட ணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
முன்னதாக மினி கூப்பர் எஸ்.இ. மாடல் 2019 வாக்கில் பன்னாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற் றத்தில் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் அதன் அய்.சி.இ. மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனி னும், எஸ்.இ. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய இ பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மூன்று கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலில் 32.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 181 பி.எச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்து கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல் லும் திறன் கொண்டுள் ளது.
No comments:
Post a Comment