புதுடெல்லி, நவ.1 ‘புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து எல்லையில் போராடும் விவசாயி களை வலுக்கட்டாயமாக அகற்ற முயற்சி செய்தால், நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை தானியங்களை சேமிக்கும் கிடங்குகளாக மாற்று வோம்,’ என்று பாரதிய கிசான் யூனியன் எச்சரித் துள்ளது.
ஒன்றிய அரசின் சர்ச் சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளான காஜிப்பூர், திக்ரியில் 40க் கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடந்த 11 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட் டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், டில்லிக்குள் நுழைவதை தடுக்க, காவல்துறையிர் கான்கிரீட் பலகைகள், இரும்பு பேரிகாடுகள், இரும்பு முள் பலகைகளை போட்டு சாலைகளை தடுத்தனர். இந்த சாலை களில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், இந்த சாலை களை பயன்படுத்தி வந்த பல்வேறு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் சாலை களை மறித்து போராட் டம் நடத்தி வருவதை எதிர்த்தும், அவர்களை அகற்ற உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இதை சமீ பத்தில் விசாரித்த நீதி மன்றம், ‘போராட்டம் என்ற பெயரில் மக்களின் தனி உரிமையை பறிக்கும் வகையில், சாலைகளை விவசாயிகள் ஆக்கிர மித்து இருப்பதை ஏற்க முடியாது,’ என்று கண் டித்தது. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன், சாலைகளில் போடப் பட்டு இருந்த தடுப்புகளை டில்லி காவல்துறையினர் திடீரென அகற்றினர். சாலைகள் சுத்தப்படுத்தப் பட்டு, ஒரு பாதையில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இதனால், போராட்டத்தில் ஈடுபட் டுள்ள விவசாயிகளை காவல்துறையினர் எந்த நேரத்திலும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற் றக் கூடும் என்று தகவல் பரவி வருகிறது. இது குறித்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகையத் நேற்று (31.10.2021) வெளியிட் டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு வலுக்கட் டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்கிறது. அப் படி செய்தால், நாடு முழு வதும் உள்ள அரசு அலு வலகங்களை விவசாய விளைபொருள் சேமித்து வைக்கும் கிடங்குகளாக மாற்றுவோம்,’ என எச்சரித்துள்ளார். விவசாயிகளின் இந்த எச்சரிக்கை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment