ராணுவத்தினருக்கு கூடுதல் சலுகை அய்.சி.அய்.சி.அய்., வங்கி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

ராணுவத்தினருக்கு கூடுதல் சலுகை அய்.சி.அய்.சி.அய்., வங்கி அறிவிப்பு

சென்னை, நவ. 1- ராணுவ வீரர்களுக்கு சிறப்பு வங்கி சேவை அளிப்பதற்கு, ராணுவத்துடன், அய்.சி.அய்.சி.அய்., வங்கி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அய்.சி.அய்.சி.அய்., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு சிறப்பு சேவை அளிக்கும் வகையில், ராணுவத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, வைப்பு தொகை இல்லாமல், ஊதியக்க் கணக்கு துவங்குதல், லாக்கர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, அய்.சி.அய். சி.அய்., வங்கி மற்றும் பிற வங்கி .டி. எம்.,களில் அளவில்லாத பரிவர்த்தனை, உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றன.

மேலும், விபத்து தனிநபர் காப்பீடாக 50 லட்சம் ரூபாயும், தீவிரவாத தாக் குலில் உயிரிழப்போருக்கு கூடுதலாக 10 லட்சம் ரூபாய்க்கான காப்பீடும் வழங் கப்படுகிறது. இது ராணுவ ஊதிய கணக்கு வைத்திருப்போருக்கு, இதர வங்கிகள் வழங்குவதை விட அதிகம். மேலும், விபத்தில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாயும், பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாயும் சலுகையாக வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் அனைத்தும், ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவினருக்கும் வழங்கப்படும்.ராணுவ வங்கி வாடிக்கையாளர்களுக்காக, இல வச ராணுவ வங்கி உதவி எண் வசதி விரைவில் வழங்கப்பட உள்ளது.இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment