டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா இரு அவைகளிலும் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. எந்த விவாதமும் நடத்தாமல் மசோதா நிறைவேற்றப்பட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்
· நாட்டின் அனைத்து தளங்களிலும் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது. நாடு வளம் பெற மோடி அரசை வீழ்த்த வேண்டும் என தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் சூளுரை.
· நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது ஜனநாயக விரோத செயல்!: எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம்..!!
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றவில்லை என்றால் குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்துவோம் என விவசாய அமைப்புகளின் தலைவர் திகாயத் எச்சரிக்கை.
· மங்களூருவைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரு மான நரேந்திர நாயக், நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிதாப் பச்சனுக்கு அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக நிகழ்ச்சி உள்ளது என எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து பிரபல பொழுதுபோக்கு சேனலான சோனி டிவி அதன் கான் பனேகா க்ரோர்பதி எபிசோடை மிட்பிரைன் ஆக்டிவேஷனில் அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே அரசிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவையடுத்து, 2020-2021 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தில் 75% மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு திருப்பிச் செலுத்த தமிழ்நாடு உத்தரவு..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment