"பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமலா ஹாரிஸ்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

"பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமலா ஹாரிஸ்..!

வாசிங்டன், நவ. 1- அமெரிக்க துணை அதிபரான 57 வயதான கமலா ஹாரிஸ் ஏற்கெனவே இரண்டு டோஸ் கரோனா தடுப் பூசியையும் செலுத்திக் கொண்டார். இந்த நிலை யில் அவர் பூஸ்டர் டோஸையும் செலுத்திக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டபின் கமலா ஹாரிஸ் கூறுகையில், "நான் தற்போது மாடர் னாவின் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்டேன், நீங்கள் தகுதியுடையவ ராக இருக்கும்போது பூஸ்டர் டோஸ் போட் டுக்கொள்ள ஊக்குவிக்கி றேன். இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் இலவசமானது.

கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அமெரிக் கர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இறந்தவர் கள். எனவே தடுப்பூசி போடுவோம், தொற்று நோயைக் கடந்து செல் வோம்" என்று அவர் கூறினார்.

இதனிடையே அங்கு பல அமெரிக்கர்கள் இன் னும் தடுப்பூசிகளை எதிர்க் கிறார்கள், அங்குள்ள மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள் ளனர். மாடர்னா, ஃபை சர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோசை அமெ ரிக்க சுகாதார அதிகாரி கள் அங்கீகரித்துள்ளனர்.

65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது டையவர்களும், கடுமை யான கரோனா தொற் றால் பாதிப்பில் இருக்கும் 18--64 வயதுடையவர்களும் இரண்டாவது டோசுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர்கள் செலுத் திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment