செத்த மொழியான சமஸ்கிருதத்தை சிங்காரித்துக் காட்டுகிறார்கள் "எல்லாம் ஒரே ஒரே" என்று சொல்பவர்கள் ஒரே ஜாதி என்று சொல்ல மறுப்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

செத்த மொழியான சமஸ்கிருதத்தை சிங்காரித்துக் காட்டுகிறார்கள் "எல்லாம் ஒரே ஒரே" என்று சொல்பவர்கள் ஒரே ஜாதி என்று சொல்ல மறுப்பது ஏன்?

இராஜபாளையத்தில் தமிழர் தலைவர் உரை வீச்சு

இராஜபாளையம் நவ. 1- "எல்லாம் ஒரே ஒரே"  என்று சொல்பவர்கள் ஒரே ஜாதி என்று சொல்ல மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 ‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? - கருத்தரங்கம்

கடந்த 18.10.2021  அன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில்  நடைபெற்ற ‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?” தலைப்பில் கருத்தரங்கம், ‘கற்போம் பெரியாரியம்‘, ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ ஆகிய நூல்கள் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நேரிடையான அதிகாரம்

நம்மிடம் இருந்தால்...

தி.மு.. தேர்தல் அறிக்கையில் சொன்னார்களே, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று - செய்தார்களா? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.

நேரிடையான அதிகாரம் நம்மிடம் இருந்தால், அதை இந்நேரம் செய்து முடித்திருப்பார் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்கள்.

ஆனால், டில்லிக்காரர்கள் குறுக்கே நிற்கிறார்கள்; உச்சநீதிமன்றம் சொன்னது, உச்சநீதிமன்றம் சொன்னது என்று சிலர் புரியாமல் சொல்கிறார்கள்.

நான் வழக்குரைஞர் - தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். வழக்குரைஞர் பெருமக்களும் இங்கே நிறைய இருக்கிறார்கள். அறிவார்ந்த அரங்கம் இந்த அரங்கம்.

உச்சநீதிமன்றத்தில் 2013 இல் வழக்கு தொடர்ந்தார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிறைய பணம் வாங்குகிறார்கள்; அந்த ஊழலை ஒழிக்கவேண்டும்; அதற்காகத்தான் நாங்கள் நீட் தேர்வை கொண்டுவருகிறோம் என்று மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா சொன்னது.

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவினுடைய வேலை என்ன?

இதனுடைய வேலை என்னவென்றால், மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக்கூடிய எம்.சி.எச். போன்ற உயர்ந்த படிப்பு அவற்றைத் தரத்தோடு சொல்லிக் கொடுக்கவேண்டும். அந்தத் தரம் சரியாக இருக்கின்றதா என்பதை ஆராய்வதுதான் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவினுடைய வேலை.

அதைவிட்டுவிட்டு, ஒருவர் வந்தார் - குஜராத்தைச் சார்ந்த கேதன் தேசாய் என்பவர். இன்றைக்கு நம்முடைய பிரதமருக்கு அவர்தான் வழிகாட்டி. நீட் தேர்விற்கு அவர்தான் கதவு திறந்தவர்.

இந்தத் தகவல் நிறைய பேருக்குத் தெரியாது. டாக்டர்களுக்குத் தெரியும்.

அவர் ஊழலை ஒழிக்கின்ற எவ்வளவு பெரிய உத்தமர் என்று சொன்னால், அவருடைய வீட்டில் சி.பி.அய். ரெய்டு நடத்தும்பொழுதுதான் தெரிந்தது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்லூரிகளுக்கு அவர்தான் அனுமதி தரவேண்டும்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி வரவேண்டும் என்று சொல்லி, இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான் - திராவிட மாடல் ஆட்சியில் மட்டும்தான்.

முதலமைச்சர் கலைஞர் அவர்களை காக்க வைத்தார்கள்

எந்த மாநிலங்களிலும் இதுபோன்று கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு கல்லூரிக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அனுமதி கேட்கிறார். அவரையே அரை மணிநேரம் காக்க வைக்கிறார். அவ்வளவு நல்ல மனிதர் கேதன் தேசாய்.

அதைப்பற்றி கலைஞர் அவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படாமல், காத்திருந்து அந்த அனுமதியை வாங்கினார்.

அப்படிப்பட்ட கேதன் தேசாய் வீட்டில் ரெய்டு நடந்தது - இப்பொழுதுகூட எல்லா இடங்களிலும் ரெய்டு நடந்துகொண்டிருக்கின்றது. ஏனென்றால், மக்களுக்காக உழைத்தவர்கள்  பாருங்கள் - அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கெங்கே இருக்கிறார்கள்? என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

கிணற்றைக் காணோம் என்பதுபோல -  இப்பொழுது நிலக்கரியைக் காணோம்

திரைப்படத்தில்தான் நடிகர் வடிவேல் நகைச் சுவையாக கிணற்றைக் காணோம், கிணற்றைக் காணோம் என்று சொல்வார்; ஆனால், இப்பொழுது நிலக்கரியைக் காணோம் என்று சொல்கிறார்கள். எத்தனை டன்? எங்கே போனது? என்று தெரியவில்லை.

அப்படிப்பட்ட கேதன் தேசாய் வீட்டில் சி.பி.அய். சோதனை செய்தபொழுது, தங்கம் பாளம் பாளமாக இருந்ததைக் கண்டுபிடித்தார்கள்.

இதுவரையில் திருப்பதி வெங்கடாசலபதியிடம்தான் தங்கம் அதிகமாக இருக்கும். அப்பேர்ப்பட்ட வெங்கடா சலபதிகூட, கேதான் தேசாயிடம் தோற்றுப்போனார். ஏனென்றால், அவ்வளவு தங்கம் கைப்பற்றப்பட்டது.

அவருடைய யுக்தியால்தான் நீட் தேர்வு - வழக்குப் போட்டார்கள். உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையில் நீதிபதி விக்ரம் ஜித், நீதிபதி அனில் ஆர். தவே என்கிற குஜராத் பார்ப்பன நீதிபதி அமர்வின்முன்பு விசாரணைக்கு வந்தது.         

மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய குஜராத் பார்ப்பன நீதிபதி

வழக்கு விசாரணையின் முடிவில், இரண்டு நீதிபதி கள் நீட் தேர்வு தேவையில்லை என்று சொன்னார்கள். ஆனால், மாறுபட்ட ஒரு கருத்தை குஜராத் பார்ப்பன நீதிபதி அனில் ஆர்.தவே கூறினார்.

மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் ஓய்வு பெற்றவுடன், நீட் தேர்வு வழக்கில் மாறுபட்ட கருத்தைச் சொன்ன அனில் ஆர்.தவே அவர்களின் முன்பு மறுசீராய்வு மனு விசாரிக்கப்பட்டது.

சட்டப்படி பேசினாலும், தவறான அணுகுமுறையின் மூலமாக நீட் தேர்வு நுழைந்ததை ஆதாரப்பூர்வமாக சொல்லலாம்.

இரண்டாவது, அரசமைப்புச் சட்டம் -

நெருக்கடி நிலை காலத்தில், எங்களைப் போன்ற வர்கள், எதிர்க்கட்சியினர் மிசா சட்டத்தில் கைது செய் யப்பட்டு சிறைச்சாலையில் இருந்தபொழுது, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல், ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரண்ட் லிஸ்டுக்குக் கொண்டு போனார்கள்.

இந்தியா என்பது பல மாநிலங்களைச் சேர்ந்ததுதான்.

இந்தியா என்கிற பாரதம், மாநிலங்களுடைய கூட்டாட்சி.

அதில், மூன்று பிரிவுகள்

ஒன்று, யூனியன் லிஸ்ட் - ஒன்றிய அரசுக்கு என்கிற அதிகாரம்

இரண்டு, மாநில அரசுக்கு.

மூன்றாவது, மாநில அரசும் சட்டம் செய்யலாம் - ஒன்றிய அரசும் சட்டம் செய்யலாம்.

கன்கரண்ட் லிஸ்ட் என்றால்ஒத்திசைவுப் பட்டியல்!

நிறைய பேர் என்ன சொல்கிறார்கள், வழக்குரைஞர் களுக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன் - கன்கரண்ட் லிஸ்ட் என்பதை பொதுப் பட்டியல் என்று மொழி பெயர்க்கிறார்கள். பொதுப் பட்டியல் என்பது தவறானது.

சரியான மொழி பெயர்ப்பை நாங்கள்தான் சொன் னோம். கன்கரண்ட் லிஸ்ட் என்றால், ஒத்திசைவுப் பட்டியல்.

கன்கரண்ட் என்றால், ஒப்புதல் பெற்று - இசைவை தெரிந்துகொள்ளுதல் என்று அர்த்தம்.

நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒரே மாதிரி கொண்டு வருகிறோம் என்று சொல்வதின்மூலமாக, கல்விச் சட்டத்தை அரசமைப்புச் சட்டத் திருத்தமில்லா மல், நெருக்கடி காலத்திலாவது நாடாளுமன்றத்தில் வைத்தார்கள். நெருக்கடி காலமே இல்லாத இந்தக் காலகட்டத்தில், யாருக்கும் சொல்லாமல், நானே ராஜா என்று சொல்வது எப்படியோ, யூனியன் லிஸ்ட்டில் கல்வி இருந்தால் எப்படியோ - அதுபோன்று, இந்தியா முழுவதும் ஒரே தேர்வாம்!

ஒரே ஜாதி என்று சொல்ல மறுப்பது ஏன்?

இந்தியா முழுவதும் ஒரே மாதிரி உண்டா?

ஒரே மதம் - ஹிந்து மதம், சனாதனமதம், ஆரிய மதம்

ஒரே மொழி- சமஸ்கிருதம்

ஒரே ரேசன் கார்டு

ஒரே கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே, ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம், அதற்குப்பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

எல்லாவற்றிலும் ஒரே, ஒரே என்று சொல்கிறீர்களே, ஏன் ஒரே ஜாதி என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள்? ஒரே ஜாதி என்றால், நமக்குள் சண்டையே வராதே - நாளைக்கு சொல்லட்டும், இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கேட்கலாமா? மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி அடிப்படையில் நடத்த வேண்டும் சொல்லலாமா? என்கிறார்கள். ஜாதி இருப்பதினால்தான் கேட்கிறோம்.

போர்க்கொடி தூக்கிய மாநிலம் தமிழ்நாடு

ஆகவே, ஓர் அதிகாரத்தை கபளீகரம் பண்ணியிருக்கிறார்கள் - அதுதான் நீட் தேர்வு!

கல்வி என்பது யூனியன் லிஸ்ட் - ஒன்றிய அர சாங்கத்தின்கீழ் இருக்கக்கூடியது என்று ஆக்கியிருக் கிறார்கள்.

எவ்வளவு பெரிய கொடுமை?

இதைத் தட்டிக் கேட்டு, இந்தியாவிலேயே இதற்காக ஒரு போர்க்கொடி தூக்கிய மாநிலம் தமிழ்நாடு.

இதை முன் எடுத்த இயக்கம் - திராவிடர் இயக்கம்

இதை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற முதல மைச்சர் - எல்லா முதலமைச்சர்களையும் காக்கக்கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம்முடைய மு..ஸ்டா லின் அவர்கள்.

'நீட்'டை ஒழிக்கிறேன் என்று சொன்னீர்களே, ஒழித்துவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள்.

அவரிடம் அதிகாரம் இருந்தால், அடுத்த நாளே உத்தரவு போட்டிருப்பார்.

அய்ந்தாண்டில் செய்யவேண்டிய சாதனைகளை 150 நாள்களுக்குள்ளே செய்திருக்கிறார்!

இன்றைக்கு எவ்வளவு வேகமாக செயல்படுகிறார்? பதவியேற்று 150 நாள்கள் ஆவதற்குள் அய்ந்தாண்டுகளில் எவற்றை நிறைவேற்ற முடியுமோ - அதில் பாதியை நிறைவேற்றி இருக்கின்ற ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே மு..ஸ்டாலின் அவர் கள்தானே - எங்களுடைய முதலமைச்சர்தானே!

கலைஞர் அவர்கள்கூட இவ்வளவு வேகமாகப் போனதில்லை. ஆகவேதான், ஆரியத்திற்குப் பயம் வந்துவிட்டது.

ஒருவர் பேசுகிறார், அவரைவிட இவர் மிக ஆபத்தானவர் என்று சொல்கிறார்

இவர் ஆபத்தானவர் என்று சொல்வதுதான் அவருக்கு சர்டிபிகேட். அவர் நல்லவர் என்று இவன் சொன்னால்தான் சந்தேகம் வரும்.

யார் சொல்லவேண்டும்?

போலீஸ்காரர்கள் நல்லவர் என்று சொன்னால், அதற்கு ஒரு அர்த்தம் உண்டு.

லாக்அப்பில் உள்ள ஒருவர், இவர் நல்லவர் அல்ல, கெட்டவர் என்று சொன்னால், என்ன அர்த்தம்?

அதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நான் அவர்களின் பெயரைச் சொல்லி அவர்களைப் பெரு மைப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், அந்தக் கழிசடைகளின் பெயர்களை நாங்கள் உச்சரிக்கமாட் டோம். அதனால், பெரிய மனிதன் ஆகலாம் என்று யாரும் நினைக்காதீர்கள்.

திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தியவருக்கே சிலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம்!

எத்தனை அனாமேதயங்கள் திராவிடர் இயக் கத்தை எதிர்த்திருக்கின்றன - மதிப்பிற்குரிய

.பொ.சி.யைவிடவா நீங்கள் பெரிய ஆள்?

அவர்தான், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தினார். கடைசியில் அவருக்கு சிலை வைத்ததே கலைஞர்தான். இந்த இயக்கம்தான் அவரையும் காப்பாற்றியது.

ஏனென்றால், எல்லோரும் கடைசியாக வந்து சேருகின்ற இடம் இந்த இடம்தான்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

திராவிட ஆட்சி வந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. அதை அடக்கமாக நம்முடைய முதல மைச்சர் சொன்னார், அண்ணா சொன்னதுபோன்றது தான் - திராவிடர் - திராவிட மரபைச் சேர்ந்தவன் என்று சொன்னார்.

நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி எங்களுடைய இயக்கம்

அதுமட்டுமல்ல, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சியே எங்களுடைய இயக்கம் - நாங்கள் அதைத்தான் தொடர்ந்து செய்கிறோம்.

அன்று நீதிக்கட்சி ஆட்சி என்ன செய்தது என்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. நாங்கள் பிரச்சாரக் கூட்டம் போடுவதினுடைய நோக்கமே அதுதான்.

டாக்டர்களாக இருக்கிறார்களே நம்முடைய பிள்ளை கள் - கிராமத்திற்கு கிராமம் நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக இருக்கிறார்கள். 1921 ஆம் ஆண்டிற்கு முன்பாக டாக்டர்களாக நம்முடைய ஆட்கள் ஒருவர் கூட கிடையாது.

அறிவில்லையா, திறமையில்லையா?

அதற்கு என்ன காரணம்?

நம் பிள்ளைகளுக்கு அறிவில்லையா, திறமையில்லையா?

வாய்ப்பு இல்லை. எப்படி வாய்ப்பில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மருத்துவக் கல்லூரிக்கு யாராவது மனு போட வேண்டும் என்றால், சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மனு போட முடியும். பிராமணர்களைத் தவிர, பார்ப்பனர் களைத் தவிர வேறு யாரும் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்று வைத்துவிட்டார்கள்.

செத்த மொழியை சிங்காரித்துக் காட்டுகிறார்கள்

இன்றைக்கு வேறு வழியில்லை என்றவுடன், எல்லோரும் சமஸ்கிருதம் படியுங்கள், படியுங்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், அது செத்த மொழி என்று ஆகிவிட்டதால், அதற்கு உயிரூட்டவேண்டும் என்பதற் காக, செத்ததை சிங்காரித்துக் காட்டுகிறார்கள்.

தமிழ் மொழிக்கு 10 சதவிகிதம் நிதி கொடுத்தால்; சமஸ்கிருதத்திற்கு 90 சதவிகித நிதி கொடுக்கிறார்கள். இரண்டுமே செம்மொழி என்று சொன்னாலும்கூட!

சமஸ்கிருதத்திற்கும், கத்தி போட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

டாக்டராக வருவதற்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந் திருக்க வேண்டும் - டாக்டர் என்ன மருத்துவமனையில் புரோகிதம் செய்யப் போகிறாரா? ஹோமம் வளர்க்கப் போகிறாரா? யாகம் வளர்க்கப் போகிறாரா?

அந்த நிலையை ஒழித்தது தந்தை பெரியார் - பனகல் அரசர் - திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி.

ஆகவேதான், நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக முடிந்தது.

நீட் தேர்வு என்பது, ஏதோ ஒரு தேர்வு என்பதற்காகப் பேசவில்லை நண்பர்களே!

காலங்காலமாக, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்கள் - அந்த மக்களுடைய பிள்ளைகள் படிக்கக் கூடாது, மருத்துவர்களாக ஆகக் கூடாது என்பதே நீட் தேர்வு.

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் அதுதானே!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கலாகாது; கல்வியைக் கொடுக்கலாகாது. இது தானே மனுதர்மம். அதுதானே இராஜகோபாலாச்சாரி யாரின் குலக்கல்வித் திட்டம்.

பச்சைத் தமிழர் காமராசர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தானே அது ஒழிந்தது. பெரியார்தானே அதற் கான முயற்சிகளை செய்தார். திராவிடர் இயக்கம்தானே அதனை ஒழித்தது.

இன்றைக்கு அந்தக் கல்வித் திட்டம் தொடர்ந் திருந்தால், நம் பிள்ளைகள் பொறியாளர்களாக ஆகியிருக்க முடியுமா?

முனைவர் நேரு மற்றும் இங்கே வழக்குரைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; இந்த இயக்கம் மட்டும் இல்லாமலிருந்தால், நான் எம்.., பி.எல். படித்திருக்கிறேன் என்றால், எனக்கு அறிவிருந்ததால்தான் படித்தேன் என்று சொல்ல முடியுமா?

மூடிய கதவை பெரியாருடைய கைத்தடிதானே தட்டித் திறந்தது

என்னுடைய அறிவை எப்பொழுது நான் காட்ட முடியும்? கதவைத் திறந்தால்தானே காட்ட முடியும். கதவை சாத்தி வைத்திருந்தார்களே - பெரியாருடைய கைத்தடிதானே அதனைத் தட்டித் திறந்தது.

கிறித்துவ மதத்தில்கூட தட்டுங்கள் திறக்கப்படும் என்கிறார்கள். ஆனால், பெரியார்தான் சொன்னார், தட்டுவோம், நீ திறக்கவில்லை என்றால், உடைப்போம் என்றார்.

ஆகவேதான், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக, பொறியாளர்களாக, வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக வந்திருக்கிறார்கள்.

அதனை ஒழிப்பது எப்படி என்று பார்த்தார்கள் - அதுவும் தமிழ்நாட்டில், திராவிட மாடல் ஆட்சி நடை பெறுகிறது.

உலக அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், 50 ஆண்டுகால வரலாற்றில், திராவிட மாடல், அண்ணா முதலமைச்சராக இருந்து, கலைஞர் முதலமைச்சராக இருந்து  - தொடர்ந்து திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வந்ததினால்தான், இவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்தன என்று.

உத்தரப்பிரதேசத்தில் நம்மைப் போன்று மூன்று மடங்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், அங்கே கூட இங்கே இருப்பதுபோன்று மருத்துவக் கல்லூரிகள் கிடையாது.

கல்விக் கண்களைக் குத்துவதற்காகத்தான் நீட் தேர்வு!

ஆகவே, நம்முடைய கல்விக் கண்களைக் குத்துவ தற்காக, நம்முடைய பிள்ளைகள் படிக்காமல் இருப்பதற்காகத்தான் நீட் போன்ற தேர்வை கொண்டு வருகிறார்கள்.

பெரியாருடைய சிந்தனை, திராவிடர் இயக்கத்தி னுடைய தாக்கத்தால் பச்சைத் தமிழர் காமராசர் கேட்டாரே, அதனால்தான், கட்சி வேறுபாடு பார்க்காமல், நம்முடைய கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, காமராசர் பிறந்த ஜூலை 15 ஆம் நாளை, கல்வி நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவேண்டும் என்றார்.

தொடரும்

No comments:

Post a Comment