பெய்ஜிங், நவ. 30- சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதே னும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பன்னாட்டு விமானப் போக்குவ ரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெக்கிங் கணிதப் பல்கலைக்கழ கம் சீனாவின் கரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். ஒருவேளை பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனு மதித்தால், கரோனா தடுப்பு முறை களைத் தளர்த்தினால், மிகப்பெரிய அளவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகபட்சமாக நாள்தோறும் 6.30 லட்சம்வரை பாதிக்கப்படலாம். நாட்டின் மருத்துவத்துறைக்குத் தாங்க முடியாத சுமை ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.
சீனா மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருவதால், சனிக்கிழமையன்று (28.11.2021) அங்கு 23 பேர் மட்டுமே புதிதாகத் தொற்றால் பாதிக்கப் பட்டனர். இதில் 20 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்து கரோ னாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சீனாவின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹாங் நான்ஷன் கூறு கையில், “புதிய உருமாற்ற, ஆபத் தான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட் டது உலகத்துக்குப் பெரும் எச்சரிக் கையாகும். இந்த ஒமைக்ரான் வைரசின் ஸ்பைக் புரதத்தில் 30 உருமாற்றங்கள் நடந்துள்ளன என்பதால், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் உலக சுகாதார அமைப்பின் செயல் பாட்டுக்கு இது பெரும் சவாலாக இருக்கக்கூடும்.
சீனாவைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள்தொகையில் 76.8 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர். இந்த ஆண்டு இறுதிக் குள் நாட்டில் 80 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வேண்டும் என்பதால் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
சீனாவில் சினோவேக் தடுப்பூசி தயாரிக்கும் சினோவேக் பயோ டெக் நிறுவனம் கூறுகையில், “உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். எங்களின் பன்னாட்டு கூட்டாளி நிறுவனங்களுடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுக்கு நகர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியபின், சீனா பெரும்பாலான பன்னாட்டு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியாவுக்குச் செல்லும் விமானங்களைக் கூட நிறுத்திவிட்டதால், சீனாவில் பயிலும் இந்திய மாணவர்களும் அங்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இதனால், 23 ஆயிரம் இந்திய மாண வர்கள் சீனப் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment