மாநிலக் கல்லூரி தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

மாநிலக் கல்லூரி தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா?

சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் மாண வர்கள் கருப்புச் சட்டை அணியக் கூடாதம்.

அதன் விவரம் வருமாறு:

Regular classes begin from tomorrow onwards. So, all come to college.  Especially students in Chennai . 

Students (boys and girls)  see that you stick to the dress code ..... very important.

Avoid black colour dress, boys - cut your hair and nails, avoid wearing bands or steel kaappu on your hands, ear rings etc.

Be on time to college.

Get your scholarship form print out according to the community that I have posted. Get your bank details.... print out of your account, IFSC CODE..... other certificates etc. 

Bring your internal test papers.

கடந்த 30.10.2021 அன்று மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதன் தமிழாக்கம் வருமாறு:

வகுப்புகள் வழக்கம்போல நவம்பர் ஒன்றாம் தேதி (திங்கள் 1.11.2021) தொடங்க உள்ளன. எனவே, அனைவரும், குறிப்பாக சென்னையில் உள்ள மாணவர்கள், கல்லூரிக்கு வரவும்.

மாணவர்கள் (இருபாலர்) முறைப்படி உடையணிந்து வரத் தவறவேண்டாம். கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ஆண்கள் ஒழுங்காக முடி திருத்திக் கொண்டும், நீண்ட நகங்களை வெட்டிக் கொண்டும் வரவும். மணிக்கட்டில் பட்டைகள், காப்புகள் போன்றவற்றை கட்டுவதையும், காதில் வளையங்கள் அணிவதையும் தவிர்க்கவும்.

குறித்த நேரத்தில் கல்லூரியில் இருக்கவும்.

கணினியில் குறிப்பிட்டுள்ள வகுப்புகளின்படி உங்களுக் கான கல்வி உதவித் தொகை படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். வங்கிக் கணக்குப் புத்தக நகல், வங்கி சம்பந்தப்பட்ட விவரங்கள், அய்.எஃப்.எஸ்.சி. குறியீடு மற்ற சான்றிதழ்களுடன் வரவும்.

உங்கள் இன்டர்னல் தேர்வுத் தாள்களையும் கொண்டு வரவும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கருப்பு நிற அடைகளை அணியக் கூடாது என்று ஒரு கல்லூரி நிர்வாகம் சொல்வதா? தமிழ் நாட்டில்தான் மாநிலக் கல்லூரி இருக்கிறதா?


No comments:

Post a Comment