புதுடில்லி, நவ. 30- தங்கப் பத்திரங்களின் (Sovereign Gold Bonds) எட்டாம் கட்ட விற்பனை திங்கள் (நவம்பர் 29) தொடங் கியது. ஒன்றிய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். வங்கி கள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தை கள், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் தங் கப் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.
டிசம்பர் 7 ஆம் தேதி தங்கப் பத்திர விற்பனை முடிவடைகிறது. நிஜத் தங்கமாக வாங்காமல் காகித முறையில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு தங்கப் பத்திரம் நல்ல திட்டம். குறைந்தபட்சம் ஒரு கிராமுக்கு தங்கப் பத்திரம் வாங்க வேண்டும். அதிகபட்ச மாக 4 கிலோ வரை வாங்கலாம்.
தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். இது போக ஆண்டுக்கு 2.5% வட்டி வருமான மும் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், தங்கப் பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்பது இத்திட்டத்தின் சிறப்பு. தங்க நகையாக வாங்கும்போது செய்கூலி செலுத்துகிறோம். ஆனால், தங்கப் பத்திரத்தில் அந்தப் பிரச்சினை யும் இல்லை. இதனால் திருட்டு உள் ளிட்ட பயமும் இருக்காது, அவசரத் தேவைக்கு வங்கிகளில் இதைக் கொண்டு குறைந்த வட்டியில் கடனும் பெறும் வசதிகளும் உள்ளன.
No comments:
Post a Comment