நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவு, மானியம் தேவை: தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவு, மானியம் தேவை: தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தல்

புதுடில்லி,நவ.30- நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவும் மானியமும் தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியு றுத்தி உள்ளார். கடந்த 28.11.2021 அன்று டில்லியில் நடைபெற்ற நீரிழிவு நோய் குறித்த அஹுஜா-பஜாஜ் கருத் தரங்கில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கலந்துகொண்டார்.

அப்போது அவர் உரையில் குறிப்பிட்டதாவது: கரோனா தொற்றுக்கு விஞ்ஞானிகள் சில மாதங்களிலேயே தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் நீரிழிவு நோய்க்கு பல ஆண்டுகளாகியும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் கள் வாழ்நாள் முழுவதும் சர்க் கரை அளவு, உணவு உள் ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு களை கடைபிடிக்க வேண்டி உள்ளது. மேலும் ஏராளமான பணத்தை யும் செலவிட வேண்டி உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிகிச் சைக்காக அரசு ஆதரவு அளிப்பதுடன் மானியம் வழங்க வேண்டியது அவசியம். மேலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப் பதற்காக அதிகப்படியான மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் இந்தப் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நவீன மருந்து கண்டுபிடிக்க வேண்டியது காலத்தின் கட் டாயம். இதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண் டும். நானும் கடந்த 30 ஆண்டு களாக இந்த நோயால் பாதிக் கப்பட்டு மருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன். உடல் பருமன், உடல் உழைப்பின்மை மட்டு மல்லாது, மன அழுத்தமும் நீரிழிவு நோய்க்கு காரணமாக உள்ளது. மன அழுத்தம் கொண்ட இந்த தொழிலை விடுத்து வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தால் இந்த நோயிலிருந்து நான் தப்பித்திருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment