1956 நவம்பர் 1 அன்று மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன என்பது உண்மை. அப்படியாயின் தமிழ்நாடு என் றல்லவா பெயரிட்டு பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும், ஏன் அவ்வாறு இன்றி அமைக் கப்பட்டது? தமிழ்நாடு தவிர்த்த மாநி லங்கள் அதன் பெயர்களை எப்படி வேண் டுமோ அப்படியே அமைத்துக் கொண் டன என்பது தானே உண்மை.
1918 ஆம் ஆண்டின் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கைதான் இந்திய மாநிலங்கள் மொழி அடிப்படையில் அல்லது இன அடிப்படையில் பிரிக்கப்பட பரிந்துரைத்தது. அப்படியாயின் இந்த ஆண்டினை தமிழ் மாநிலம் அமைப்ப தற்கான வெள்ளோட்ட ஆண்டு என்று அறிவிக்கலாமா? இதேபோன்று ஒன்றாய் இருந்த காங்கிரஸ் கட்சியும் நான்காக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று வலிய வந்து சேர்ந்தது .
300 ஆண்டுகளாக மதராஸ் (சென்னை) ராஜ்யம் என்று இருந்ததை அப்படியே தமிழ்நாடு அரசாங்கம் என மாற்றி இருக்கலாமே! ஏன் மாற்றவில்லை? அன்றிருந்த அரசு தான் இதற்கு காரணம் என்று வரலாற்று தரவுகள் மூலம் நன்றாக அறியப்படுகிறது .
'தமிழ்நாடு' என்ற சொல்லை பெரியார் 1927 ஆம் ஆண்டிலேயே 'குடிஅரசு' ஏட் டில் பயன்படுத்தினார் என்பதை பதிவுகள் தெரிவிக்கின்றன இதன்படி 'தமிழ்நாடு' பெயர் 1927 முதல் என்று கூட வாதிடலாம்.
'தமிழ்நாடு' பெயர் மாற்றம் வேண்டும் என்ற விவாதம் வந்த போதெல்லாம் காமராஜர் முதலமைச்சராக இருந்தாலும் எல்லா விவாதங் களுக்கும் பதில் கூறிய சி. சுப்பிரமணியம் அவர்கள், 1961 வரை இந்த பெயர் வைக்கும் பிரச்சினையில் யாரும் அநாவசியமாக ஈடுபடத் தேவையில்லை என்று பேசியதாக தான் பதிவுகள் உள்ளன. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழ்நாடு என்றும் அதிகாரப் பூர்வமற்ற வகையில் பயன் படுத்தலாம் என்பதே சி. சுப்பிரமணியம் அவர்களது நிலைப்பாடாக இருந்தது என்பதை அறிய முடிகிறது .ஆனால் சட்ட மன்றம் மூலமாக வரைந்து பரிந்து ரைத்தால் மட்டுமே சட்டபூர்வ தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்ய முடியும் என்ற நடுவண் அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில், தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அறிஞர் அண்ணா அவர்கள் தலை மையில் இருந்த அரசு ,அவரால் 18.7.1967 அன்று தமிழ்நாடு என்று முன் மொழிந் ததை, தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டு 23 .11.1968 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றது என்பதை அறியப்படுகிறது. அப்படியாயின் 23. 11. 1968 நாளை தமிழ்நாடு பெயர் மாற்றம் நாள் என்று கருதலாமா?
குழந்தை பிறந்த அன்றே பெயர் வைப்பது என்ற முறை எங்கும் இல்லை.ஆனால் எப்போது பெயர் வைத்தாலும் பிறந்தநாள் சான்றிதழில் பெயர் குறிப்பிடு வது என்பது குழந்தை பிறந்த நாளிலிருந்து என்பது உணரப்படுவது ஆகும்.
எனவே 'தினமணி'யில் 18.11.2021 அன் றைய டாக்டர் கே.பி. ராமலிங்கம் அவர் களது கூற்றும், (26.11.2021) அன்றைய கட லூர் வளவ துரையன் அவர்களது கூற்றின் படியும் அன்றி,குழந்தை பிறந்த நாளான 18.7.1967 தானே சரியானதாக இருக்க முடியும்!
"நடுநாடன்" திருவான்மியூர், சென்னை-41.
No comments:
Post a Comment