நியூயார்க், நவ. 1- அமெரிக்கா வில் நியூஜெர்சி மாநிலத் தின் பிளைன்ஸ்போரோ நகரத்தில் வசித்துவந்த இந்தியர், சிறீரங்கா அர வப்பள்ளி (54). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மருந்து நிறு வனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக சிறீ ரங்கா பணிபுரிந்து வந் தார். சூதாட்டத்தில் ஆர் வமுள்ள சிறீரங்கா, பில டெல்பியா நகருக்கு வெளியே உள்ள சூதாட்ட விடுதியில் விளையாடி, 10 ஆயிரம் டாலர் (ரூ.7.50 லட்சம்) பணத்தைக் குவித்தார். பின் வீட்டுக்கு காரில் கிளம்பினார்.
சிறீரங்கா அதிக பணம் வென்றதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அமெ ரிக்க வாலிபர், அவரை தன்னுடைய காரில் பின் தொடர்ந்தார். சிறீரங்கா 80 கி.மீ. தூரம் பயணித்து தனது வீட்டை அடைந் ததும், அந்த வாலிபர் சிறீரங்காவை மிரட்டி அவரிடம் இருந்து பணத் தைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது நடந்த தகராறில் சிறீரங் காவை துப்பாக்கியால் வாலிபர் சுட்டுக் கொன்று விட்டார். அப்போது வீட் டுக்குள் சிறீரங்காவின் மனைவியும், மகளும் உறங்கிக் கொண்டிருந்த னர்.
மருந்து நிறுவன அதி காரியை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடிய ஜெகாய் ரீட் ஜான் என்ற 27 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். பிளைன்ஸ் போரோ நகரில் பிரபல மானவராக விளங்கிவந்த இந்திய மருந்து நிறுவன அதிகாரி சுட்டுக் கொல் லப்பட்டது, அப்பகுதி இந்தியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
No comments:
Post a Comment