காரைக்குடி, நவ. 1- மறைந்த காரைக் குடி பாவலர் மாமணி புலவர் ஆ.பழநி அவர்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை வழியில் இறுதி வரை பயணித்தவரும், தமிழ் நாடு அளித்த "பாவேந்தர் விருது" டாக்டர் கலைஞர், டாக்டர் நாவலர் அவர்களால் வழங்கப் பட்டவரும், தனது மரணப் படுக்கையில் கருஞ்சட்டையு டன், சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளித்தவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேரன் புக்கும் பாசத்திற்குரியவராகவும் திகழ்ந்தவர்.
மதுரை காமராசர் பல் கலைக்கழகப் பாட நூலாக இருந்த "அனிச்சஅடி" நூலின் ஆசிரியராவார். தமது எழுத் துலகப் படைப்புகளில் கவிதை, காவியக் காப்பியம் என 17 நூல்களையும் தமிழ் உலகிற்கு அளித்துள்ள புலவர் ஆ.பழநி அவர்கள் இறுதியில் எழுதிய "கம்பரின் மறுபக்கம்" எனும் சிறந்த நூலினைப் பாராட்டி தஞ்சை, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் திலுள்ள "பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்" நடத்திய பாராட்டு விழாவில் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் தமிழர் தலைவர் அவர்களால் சிறப் புடன் பொற்கிழி ரூ.25,000 அளித்துப் பாராட்டைப் பெற் றுள்ள புலவர் ஆ.பழநி 2ஆம் ஆண்டு நினைவேந்தல் "அனிச் சம்" இல்லத்தில் நடந்தது.
ஆ.பழநி நினைவு நாள் நிகழ்வு
ஆ.பழநி அவர்ளின் 2ஆம் ஆண்டு நினைவு நாளில் (அக். 31இல்) மலர் மரியாதை செய்து, முதியோர் இல்லத்திலிருக்கும் 25 முதியவர்கட்கு பள்ளத்தூர் அருணாசலம் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
காரைக்குடியிலுள்ள புலவர் ஆ.பழநியின் அனிச்சம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அண்ணா தமிழ்க் கழக நிறுவனர் அ.கதிர்வேல் தலைமையில் "அனிச்சம்" அறக் கட்டளைத் தலைவர் சாமி திராவிடமணி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினர் ப.சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப.பழனிவேலு, கல்லல் ஒன்றிய கழக அமைப் பாளர் காரட்டி பாலு, நகர பகுத்தறிவு கழகச் செயலாளர் ந.செல்வராசன், 11ஆவது வட்ட திமுக செயலாளர் இராதாகிருட்டிணன், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment