ஆத்தூர், நவ. 1- ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆத்தூர் ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி கலந்துரை யாடல் கூட்டம் சிறப்பாக 30.10.2021 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
வரவேற்புரை நீ சேகர் நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார். தலைமை வகித்து சிறப்பு செய்தார் மாவட்ட தலைவர் த.வானவில்.
இந்நிகழ்வில் மண்டல செயலா ளர் இரா.விடுதலை சந்திரன், மாநில மாணவர் கழகப் பொறுப் பாளர் தோழர் இரா செந்தூர் பாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.சுரேஷ், நகர தலைவர் வெ அண்ணாதுரை, மேட்டூர் மாவட்ட செயலாளர் க.ந.பாலு ஆகியோர்கள் முன் னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஊமை செயராமன் கருத்துரை நிகழ்த்தினார்.
மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் சிறப்புரை யாற்றினார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் கருத்துகளை பதிவு செய்த தோழர்கள். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந் தம், செந்தாழை பாலு பகுத்தறி வாளர் கழகம், இலுப்பநத்தம் கா. பெரியசாமி பகுத்தறிவாளர் கழ கம், நரசிங்கபுரம் வெங்கடாசலம், ஆத்தூர் வேணுகோபால் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.
நன்கொடை
பின்னர் ஆத்தூர் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் நிகழ்ச்சிக்காக முதல் தவ ¬ணாக நன்கொடையாக வ.முரு கானந்தம் 1000, மேட்டூர் மாவட்ட செயலாளர் க.ந.பாலு 500, கா. பெரியசாமி 500, செந்தாழை பாலு 500 ஆகியோர் நன்கொடை கொடுத்து மகிழ்ந்தனர். நன்றியுரை கா.பெரியசாமி கூறினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்.
1)நீட் தேர்வின் அச்சத்தில் மறைவுற்ற மாணவர் பொள்ளாச்சி முத்தூர் கீர்த்தி வாசன் அவர்கள் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறது.
2)11-.11.-2021 அன்று நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்திற்கு ஆத்தூர் நகரத் துக்கு வருகை தரும் தமிழர் தலை வர் அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர் மானிக்கப்படுகிறது.
3)11.-11.-2021 அன்று காலை10 மணிக்கு ஆத்தூரில் நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் கற்போம் பெரியா ரியல் உள்ளிட்ட 4 நூலின் அறிமுக விழா மிகுந்த எழுச்சியோடு நடத் துவது என இக்கூட்டத்தில் தீர் மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment