24.11.2021 முதல் 28.11.2021 வரை - திருச்சி / சேலம்
வங்கிகளில், கிளார்க் பதவிகளுக்கான துவக்க நிலை தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோருக்கு அய்ந்து நாட்கள் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திருச்சி மற்றும் சேலம் நகரில் நவம்பர் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகம், (ஆசிரியர் பயிற்சி கழக அரங்கம்), சிம்கோ சாலை, சுந்தர் நகர், திருச்சி 620021, மற்றும் சேலத்தில், அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, சங்ககிரி நெடுஞ்சாலை, பெரிய சீரகபாடி, சேலம் 636308, பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், வங்கி தேர்வு ஆணையத்திற்கு (IBPS) அனுப்பிய விண்ணப்பத்தின் நகலை, empower.socialjustice@gmail.com-க்கு மின் அஞ்சலாகவோ அல்லது அஞ்சல் மூலம் ஒருங்கிணைப் பாளர், சமூக நீதி அகாடமி, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 139, பிராட்வே சாலை, சென்னை-600108 என்ற முகவரிக்கு நவம்பர் 21-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கை மட் டுமே உள்ளதால், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, empower.socialjustice@gmail.com-க்கு மின் அஞ்சல் மூலமாக அல்லது டி.ரவிக் குமார், ஒருங்கிணைப்பாளர் - 99406-69385, இரா.இராசு (சேலம்) 63834-29221 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment