மாட்ரிட், நவ. 1- தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் பிறந்தன.
பிறந்து எட்டு நாட் கள் ஆகும் அந்த ஆண் மற்றும் பெண் வெள்ளை சிங்கக் குட்டிகள் அண்ட லூசியா பகுதியில் உள்ள மலைக் கிராமமான ஜிமெனா டி லா புரோன் டெராவில் அவற்றிற்கு உணவளிப்பதற்காக சிறப்பு அறைக்கு மாற்றப் பட்டன.
இந்த சிங்கக்குட்டி களின் பெற்றோர்கள் சாதாரண ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆகும். எனவே அவைகளிடம் இருந்து வெள்ளை சிங்கங்கள் பிறந்துள்ளது விலங்கிய லாளர்களை ஆச்சரியத் தில் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய வெள்ளை சிங்கங்கள் பாதுகாப்பு அறக்கட் டளை, இந்த விலங்குகள் அல்பினோக்கள் இல்லை என்றும் இவை தென் னாப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் உள்ள கிரேட்டர் திம்பாவதி பகுதியின் அரிய மரபணு என கூறியுள்ளது.
1930 களில் வெள்ளை சிங்கங்கள் இனப் பெருக்கத்திற்காகவும் வேட்டைக்காகவும் காடுகளில் இருந்து அகற் றப்பட்டு சிறைபிடிக்கப் பட்டன. தற்போது 13க் கும் குறைவான வெள்ளை சிங்கங்களே அவற்றின் இயற்கையான வாழ்வி டங்களில் வாழ்கின்றன என கூறப்படுகிறது.
இதற்கு காரணம் அவை தற்போதைய அறிவியலால் வேறுபட்டவை என அங்கீகரிக்கப்படாத தால் சட்டத்தால் பாது காக்கப்படவில்லை என் பதே ஆகும். வெள்ளை சிங்கங்கள் பாந்தெரா லியோ என வகைப்படுத் தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment