நியூயார்க், நவ. 1- பூமியை புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:-
வலுவான புவி காந்த புயல் பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் அதன் தாக்கம் உணரப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவ முனையின் கீழ் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், ஜெர்மனி, செக்குடியரசு, போலாந்து, உக்ரைன், ரசியா, கஜகஸ்தான், மங்கோலியா, சீனா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பகுதிகள் உள்ளன.
புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது. மேலும் விண்கலத்திலும் சில தாக்கங்கள் ஏற்படலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கவேண்டும்: இத்தாலிய பிரதமர் வலியுறுத்தல்
ரோம், நவ. 1- -''ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும்,'' என, 'ஜி 20' மாநாட்டை துவக்கி வைத்து, இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி வலியுறுத்தினார்.
அய்ரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் 'ஜி 20' அமைப்பு நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு அழைப் பாளராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மாநாட்டை துவக்கி வைத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி பேசியதாவது:உலகமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் ஏற்பட்ட சவால்களையும், நெருக்கடியையும் சந்தித்து வருகின்றது.
கரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக் கப்பட்டது பாராட்டத்தக்கது. ஆனால் வளர்ந்த, வளரும் நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமே தடுப்பூசியால் பலன் அடைந்துஉள்ளனர்.ஏழை நாடுகளில் 10 சதவீத மக்களுக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை. அதனால் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி, அங்குள்ள மக்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment