லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிப்பு

ரியாத், நவ. 1- ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலை மையிலான அரசு படைகளுக் கும், ஹவுதி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகி றது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.   

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே போல் ஏமன் அரசு படைக ளுக்கு ஆதரவாக சவுதி தலை மையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றன.

இதனால், ஹவுதி கிளர்ச்சி யாளர்களுக்கும், சவுதி அரே பியாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. சவுதி அரேபி யாவின் எல்லைக்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப் போது தாக்குதல்களை அரங் கேற்றி வருகின்றன.

இதற்கிடையில், லெபனான் நாட்டின் தகவல்துறை அமைச் சர் ஜார்ஜ் குர்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உள் நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக கருத்து கூறியுள் ளார். வெளிப்புற ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக ஹவுதிக்கள் தங்களை பாதுகாத்துக் கொள் கின்றனர்என தெரிவித்துள்ளார்.

இது, சவுதி அரேபியா தலை மையிலான கூட்டுப்படைக ளின் தாக்குதலை நேரடியாக விமர்சிக்கும் வகையில் உள் ளது. லெபனான் அமைச்சர் பேசிய காட்சிப்பதிவு கடந்த சில நாட்களாக சமூகவலை தளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து, சவுதி - லெபனான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லெபனான் தகவல்துறை அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக் கும் விதமாக லெபனானில் இருந்து அனைத்து வகையான இறக்குமதிக்கும் சவுதி அரே பியா தடைவிதித்துள்ளது. தங்கள் நாட்டு மக்கள் லெப னான் செல்லவும் சவுதி தடை விதித்துள்ளது. அதேபோல், லெபனான் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபியா கெடு வித்து உள்ளது.

சவுதியை தொடர்ந்து அதன் நட்பு நாடான பஹ் ரைனும் தங்கள் நாட்டில் இருந்தும் 48 மணி நேரத்திற்குள் லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என கெடு விதித்து உள்ளது. இந்த சம்பவத்தால் வளைகுடா நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  

No comments:

Post a Comment