புதுடில்லி, நவ.30 மாநி லங்களவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 3 தி.மு.க. எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நாடாளுமன்ற மாநி லங்களவையில் உறுப்பின ராக இருந்த அ.தி.மு.க. வைச் சேர்ந்த முகமது ஜான் மறைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட காலியிடம் மற்றும் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகிய தால் உருவான காலியிடங் களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எம்.அப் துல்லா, டாக்டர் கனி மொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகி யோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரும் நாடா ளுமன்ற குளிர்கால கூட் டத் தொடரின் முதல் நாளான நேற்று (29.11.2021) மாநிலங்க ளவை தலைவர் வெங்கையா நாயுடு முன் னிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண் டனர்.
பொதுவாக பதவி ஏற்பு நிகழ்ச்சிகளின் போது பதவி ஏற்பவர்கள், இறைவன் பெயரால் அல்லது உளமாற என கூறி உறுதிமொழி ஏற்பது வழக்கம். ஆனால் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட தி.மு.க. எம்.பி.க்கள் 3 பேரும் விழுமிய முறைமை யுடன் உறுதி ஏற்பதாக தெரிவித்தனர்.
இதேபோல் திரிணா முல் காங்கிரஸ் எம்.பி. லூய்சின்ஹோ பேரோ, காங்கிரஸ் எம்.பி. ரஜானி அசோக்ராவ் படேல் ஆகியோரும் பதவி ஏற் றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment