மும்பை, நவ. 1- ரியல்மி நிறு வனம் சமீபத்தில் ஜிடி நியோ 2 அலைபேசியினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன் னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ரியல்மி ஜிடி 5ஜி அலைபேசி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரியல்மி நிறு வனம் ஜிடி ப்ரோ மாடலை உருவாக்கி வருவதாக தக வல் வெளியாகி உள்ளது.
புதிய ஜிடி ப்ரோ வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த அலை பேசிகள் அடுத்த இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஆண்டு துவக்கத் திலோ அறிமுகம் செய்யப் படலாம் என கூறப்படு கிறது. ஏற்கனவே ரியல்மி ஜிடி 2 ப்ரோ அலைபேசி யின் விவரங்கள் அய்.எம். இ.அய். வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி புதிய ரியல்மி அலைபேசிகள் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகி றது. விரைவில் இந்த அலைபேசியின் முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகி றது. எனினும், ப்ரோ மாடல் என்பதால், இதில் ரியல்மி ஜிடி 5ஜி விட சில அப்கிரேடுகள் செய்யப் பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment