ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் - 11 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் - 11 பேர் பலி

ஹர்டோம், நவ. 1- சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல் பட்டார். அதன் பின்னர் மக்கள் போராட்டம் மற்றும் ராணுவ கிளர்ச்சியையடுத்து ஒமர் அல்-பஷீர் சூடான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு சூடானில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராணுவத்தினர் கடந்த 25-ஆம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட் டனர். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களை ராணு வத்தினர் சிறைபிடித்துள்ளனர். மேலும், ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத் துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோவையும் ராணுவத்தினர் சிறைபிடித்துள் ளனர். ராணுவ தளபதியான ஜென ரல் ஃபடக் அல்-பர்ஹன் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளால் மக் கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால், அந்நாட் டின் பல்வேறு பகுதிகளில் இணைய தள சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், போராட் டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்கள் மீது ராணுவத்தினர் கண் மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவ ஆட் சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். அந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்கு தலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக் கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தால் சூடானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற் பட்டுள்ளது.

No comments:

Post a Comment