தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

புதுடில்லி, நவ.27 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட் டில் ரூ.73 ஆயிரம்கோடி ஒதுக் கப்பட்டது. இந்த நிதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்த மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

இந்ததிட்டத் துக்கான ஊதியம் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக எப்போதெல்லாம் கூடுதல் நிதி தேவைப்படுகிறதோ, அப் போதெல்லாம் ஒன்றிய நிதிய மைச்சகத்தின் மூலம் தேவை யான நிதி பெறப்பட்டு வழங் கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2020-2021ஆம் நிதியாண்டிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.61,500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், பின் னர் ரூ.1,11 லட்சம் கோடியாக இந்த நிதி மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின்

எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சென்னை, நவ.27 இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக்கொண்டு சான்றிதழ் பெற்றவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என பல நாடுகள் பச்சைக்கொடி காட்டி உள்ளன. இதுதொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 15 நாடுகள் இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்து, இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த நாடுகள் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பெலாரஸ், ஜார்ஜியா, ஈரான், கஜகஸ்தான், லெபனான், நேபாளம், நிகரகுவா, பிலிப்பைன்ஸ், சான்மெரினோ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகும். இந்திய தடுப்பூசி சான்றிதழுடன் இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த 22 நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியாவும் அங்கீகரித்துள்ளது.

இந்த தகவல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment