கோவை, அக். 17- தமிழ்நாட்டில் போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக் கள் அறிந்து கொள்ளும் வகையில் நிழற்படக் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதனை செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறை மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு படையினர் ஆகிய துறைகளின் சார்பில் இயற்கை பேரிடர்களின் போது எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடு படவேண்டும் போன்றவை குறித்த விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மீட்புப் பணி கள் குறித்த செயல்முறை விளக் கத்தை பார்த்து துறை அதிகாரி களுடன் அது சம்பந்தமாக விளக் கங்களை கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மேற் கொள்ளும் நலத்திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகள் குறித்து நிழற்படக் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதே போல் அனைத்து பகுதியிலும் அமைக்கப்பட வேண் டும்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர நிழற்படக் கண்காட்சியை திறந்து வைத்தேன். இதன் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் மேலும்.
பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விரைவாக நடவ டிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் நல வாழ் விற்கான பணிகள் தொடங்கும். அதேபோல் இந்த வாரியம் மூலம் போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை போன்றவை வழங்குவது அந்தந்த மாவட்ட நிர் வாகத்தால் மேற்கொள்ளப்படும். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது சம்பந்தமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தத் துறை சார்ந்த அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதே போல் அந்த மாவட்டத்தில் எந்தெந்த பகுதி களில் எல்லாம் அரசுக்குச் சொந்த மான நிலங்கள் உள்ளன என்பது குறித்து ஆராய்ந்து அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment