சமூகநீதி கண்காணிப்புக் குழுவும் - நல வாரியமும் இணைந்து செயல்படட்டும்!
தமிழ்நாடு அரசின் ‘‘ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்'', ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சரித்திர சாதனை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறி வித்து, செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகி யோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாது காக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினை களுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்' என்கின்ற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
ஆணையம் அமைப்பு!
அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத் தும் விதமாக, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடி யினர் நல ஆணையத்திற்குத்' தலைவர் மற்றும் உறுப் பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆதிதிரா விடர் மக்க ளின் அடிப்படை வசதிக்காக தமிழ்நாடு அரசு ரூ.265 கோடி வழங்கியிருப்பது மிகச் சிறப் பானதாகும்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சிவகுமார் ஆணையத்தின் தலைவராகவும், ‘தலித் முரசு' என்ற இதழை நடத்தி வரும் புனிதப் பாண்டியன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், வழக்குரைஞர் சு.குமாரதேவன், எழில் இளங்கோவன், லீலாவதி தனராஜ், வழக்குரைஞர் பொ.இளஞ்செழியன், முனைவர் கே.ரகுபதி ஆகிய 5 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டு காலம் ஆகும். இந்த ஆணையம் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உரிய ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அர சுக்கு அவ்வப்போது வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நீதிக்கட்சி ஆட்சியில்...
நீதிக்கட்சி ஆட்சி முதலாவது அமைச்சரவையி லேயே தாழ்த்தப்பட்ட மக்கள் பொது வீதிகளில், நீர் நிலைகளில் புழங்குவதற்கு இருந்து வந்த தடை - இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்கப்பட்டு, நீக்கப்பட்டது.(அரசு ஆணை எண்: 2660 நாள்: 25.9.1924).
நீதிக்கட்சி ஆட்சியில் தொழிலாளர் (Labour Dept) துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்டோர் நலனில் அக்கறை கொண்டு கல்வி முதல் பல துறைகளிலும் உயர்த்திட உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனை
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராகயிருந்தபோது நிறைவேற்றிய ஒரு சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்த பெருஞ்செயலாகும்.
ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மற்றும் கல்வி நிலையில் அடித்தளத்தில்- மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்கு சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி, ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந் ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முடிவு 27.1.2008 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக் கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டில் “தமிழ்நாடு அருந்ததியர்கள் “தனியார் கல்வி நிலை யங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங் கள் மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங் களை அல்லது பதவிகளை தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டிற்குள்ளாக ‘‘தனி ஒதுக்கீடு செய்தல் சட்டம்'' இயற்றப்பட்டு,29.4.2009இல் இது தொடர்பான விதி களும் உருவாக்கப்பட்டு தி.மு.கழக ஆட்சியில் இவ் வாறு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் காரணமாக 2009-2010இல் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ - மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவ - மாணவியர் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர்!
2008-2009 ஆம் ஆண்டில், பொறியியல் பட்டப் படிப்பில் அருந்ததியர்களுக்கு கிடைத்த இடங்கள் 1093. உள் ஒதுக்கீடு வழங்கியதற்குப் பிறகு 2009-2010 ஆம் ஆண்டில், அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1,165!!
2010- 2011 இல் இந்த எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில் 70 என்றும், பொறியியல் கல்லூரிகளில் 1,813 என்றும் மொத்தம் 1,883 என்றும் மேலும் அதி கரித்தது. 2009-2010 இல் முதன் முதலாக - அருந்ததி யர்க்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, ‘பெண் சிங்கம்' என்ற திரைப்படத்திற்கு தான் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயையும், மேலும் தன் சொந்தப் பணத்தி லிருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து நன்கொடையாக வழங்கி, இந்த 1,221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5.12.2009 அன்று வழங்கியவர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் ஆவார்.
தலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வேறு துறைகளுக்கு ஒதுக்கியதில் ஒன்றிய அரசுக்குப் பெரும் பங்குண்டு.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் சமூக அநீதிகள்!
தலித் மாணவர்களுக்கு ஆராய்ச்சித் துறையில் அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகையை நிறுத்தியது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கை எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ள 2018 இல் உச்சநீதிமன்றத் தில் நடைபெற்ற ஒரு வழக்கின்போது அரசின் சார்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞர் கூறிய கருத்து கவ னிக்கத்தக்கது.
‘‘கடந்த 70 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் ஏனைய மக்களைவிட அதிகமான நன்மைகளையும், சலுகைகளையும் வழங்கிவிட்டோம். காரணம், பட்டியலின மக்கள் ஏனையவர்களை விட அந்தஸ்தில் குறைந்தவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதே!
நாம் வேலை வாய்ப்புகளில் வழங்கிய இட ஒதுக்கீடுகள் அவர்களை ஜாதிய துவேஷங்களிலிருந்து விடுவித்திடவில்லை. எல்லா எதிர்மறையான சமுதாய பழக்க வழக்கங்களும் அவர்களை இன்னும் துரத்திக் கொண்டே இருக்கின்றன.
அவர்களுக்கும் - இதர ஜாதிகளைச் சார்ந்தவர் களுக்குமிடையே திருமணங்கள் நடப்பதில்லை. பட்டியலின ஜாதியினர், பழங்குடியினர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைகளை வழங்கு வது, அவர்களை ஜாதிய அடுக்குமுறையில் உயர்த்து வதில்லை'' - இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
என்ன செய்திருக்க வேண்டும்?
மற்றவர்களோடு சமமாக வரவில்லை என்றால், இட ஒதுக்கீட்டைவிட மேலும் சிறப்பான திட்டத்தையல்லவா தெரிவித்திருக்கவேண்டும்?
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், பட்டி யலின மக்களுக்கான, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான இட ஒதுக்கீடு விழுக்காட்டை முழுமையாக நிறை வேற்றுவதில்லை என்பதுதான்.
ஆதிதிராவிடர் நலவாரியமும் - சமூகநீதி கண்காணிப்புக் குழுவும்!
தமிழ்நாடு அரசால் இப்பொழுது உருவாக்கப்பட் டுள்ள ‘‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்'' இவற்றை கவனமாகக் கண்காணிக்கும்.
இந்த வகையில், தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்புக் குழுவும், இந்த நல ஆணையமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயலாற்றும் என்பதில் அய்யமில்லை.
வீறுநடை போடும் தமிழ்நாடு அரசு
‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்று திராவிடர் கழகம் அளித்த பட்டத்தினை மிகச் சரியாக நியாயப் படுத்தும் வகையில், ஒவ்வொரு நாளும், தமிழ்நாடு அரசு வீர - விவேக நடைபோடுவது வரவேற்கத்தக்கதும் - பாராட்டத்தக்கதுமாகும்.
ஆம்! தமிழ்நாடு திராவிடர் மண் - தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்!
வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!!
சென்னை
30.10.2021
No comments:
Post a Comment