செய்தி சிதறல்கள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

செய்தி சிதறல்கள்....

உத்தரவு

பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை தெளிவாக விழாவிட்டாலும் ஆவணங்களை சரி பார்த்து ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என உணவுத் துறை உத்தர விட்டுள்ளது.

வெளியீடு

மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை நடத்தி தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து அமர வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அளவுக்கு முகக் கவசம் இருப்பதை உறுதி செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தேர்வுக் குழு

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய ஒய்வு  பெற்ற அய்..எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமை யிலான குழுவில் சுரேஷ், தணிகாசலம் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அரசு சுகாதாரத் துறையினர் முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ் ணன் உத்தர விட்டுள்ளார்.

நியமனம்

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய பதிவாள ராக ஜி. ரவிக்குமாரை நியமனம் செய்து துணை வேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல்

புதுச்சேரியில் நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

கூடுதல்

தமிழ்நாடு காவல்துறையில் முதல் முறையக உளவுத் துறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்பமயம்

உலக வெப்பமயம் அதிகரிக்க காரணமாக இருக்கும் 13,115 நகரங்களில் முதல் பத்து மோசமான இடங்களில் சென்னை உள்பட நான்கு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

வலியுறுத்தல்

காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக் கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட் டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத் துக்கு ஆந்திரா - தெலுங்கானா அரசுகள் ஒத்து ழைப்புதர தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

செயல்படும்

குன்னூரில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை நவம்பர் முதல் செயல்படும் என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி அளித்திருப்பதாக தி.மு.. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித் துள்ளார்.

அதிகரிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக குழந்தை பெறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்த இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குண மடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment