சென்னை, அக். 14- பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத் தில் நீண்ட நாட்களாகக் கொட்டிக் கிடக்கும் குப்பை களை பயோ மைனிங் முறை யில் அகழ்ந்தெடுக்கும் பணி, கொடுங்கையூரில் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய் யும் இயந்திரத்தின் செயல் பாட்டை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
’’பெருநகர
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக் கப்படுகின்றன. இந்தத் திடக் கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகை யில் பதனிடும் மய்யங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள் பெருங் குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப் பட்டு வருகின்றன.
தமிழ்நாடு
முதலமைச்சர், சென்னையை மாசு இல்லாத தூய்மையான நகரமாகப் பராமரிக்கவும், கொடுங்கை யூர் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாட்களாகத் தேங்கி யுள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கவும், உர மய்யங்களை வலுப்படுத்தி
திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டுமானம் மற்றும் இடி பாட்டுக் கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும் அறிவுறுத்தியுள் ளார்.
அதனடிப்படையில்
பெருங்குடி குப்பை கொட் டும் வளாகத்தில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியானது அமைச்சர்க ளால் 12.10.2021 அன்று
தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் நீண்ட நாட்களாகக் கொட்டிக் கிடக்கும் குப்பை 34.02 லட்சம் கன மீட்டர் அளவில்
உள்ளது. இதை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியா னது ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் 6 சிப்பங்களாக மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்யும் வகையில் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்
தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,
இந்து சமயம் மற்றும் அற நிலையத்துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு ஆகிய
இரு வரும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவு களைக் கல் மற்றும் மண லாகப் பிரித்தெடுத்து
மறு சுழற்சி செய்யும் இயந்திரத் தின் செயல்பாட்டை 12.10.2021 அன்று தொடங்கி வைத்துப் பார்வையிட் டனர்.
இதனிடையே,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சரும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச் சரும் ராயபுரம் மண்டலம், வார்டு 54இல் அமைக்கப் பட்டுள்ள தோட்டக்கழிவு கள் மற்றும் தேங்காய்க் குடுவைகளை மறுசுழற்சி செய்யும் மய்யத்தைப் பார் வையிட்டனர். தொடர்ந்து, வார்டு- 54, வால்டாக்ஸ் சாலையில் உள்ள மாநக ராட்சி கட்டணமில்லாக் கழிப்பிடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக் கழிப்பறைகளைத் தூய்மை யாகப் பராமரிக்கவும், சேத மடைந்த கழிப்பறைகளை உடனடியாகச் சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தர விட்டனர்’’.
இவ்வாறு
சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment