இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மாநில உரிமைகளை ஒன்றிய அரசு மறுப்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சி குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மகாராட்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேச்சு.
· நீட் தேர்வு சமத்துவத்தை உருவாக்கவில்லை. மாறாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு சார்பாகவும் சலுகை பெற்ற பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நியாயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது என பேராசிரியர்கள் ஜோஷ், சங்கரி தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· இதர பிற்படுத்தப்பட்டோர், மராட்டிய ஒதுக்கீடுகள், கரும்புத் தொழிலாளர்களுக்காக போராடுவேன் என்று மகாராட்டிரா மா நில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர் மறைந்த கோபிநாத் முண்டே மகளுமான பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
· மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பார்வையிட்ட காட்சிகளை வெளியிட்ட ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு மருத்துவமனை உயிரியல் பூங்கா அல்ல என மன்மோகன் சிங் மகள் கண்டனம்.
· கருநாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு வி.எச்.பி. அமைப்பினர் திரிசூலத்தை அளித்தது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment