தலைமை மருத்துவர் தலைமையில் நடந்தது
சென்னை, அக்.31 சென்னை அரசு மருத்துவமனைகளில் உலக பக்க வாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள், அந்தந்த மருத்துவமனை
தலைமை மருத்துவர்கள் தலை மையில் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29ஆம்தேதி உலக பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படும்.
அதன்படி 29.10.2021 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனையில் பக்கவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டீன் டாக்டர் சாந்திமலர் தலை மையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டது. பொது மக்களுக்கு துண்டு பிரசுரங் களும் வழங்கப்பட்டன.
இதையடுத்து பக்கவாதம் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு, மருத்துவர்கள் விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத் துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண் டனர்.
இதேபோல், சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் இயக்குநர் மருத்துவர் மணி தலைமையில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது டாக்டர் மணி கூறியதாவது:-
பக்கவாதம் என்பது மூளையின் ரத்தக்குழாய்களில் திடீரென்று அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவது அல்லது ரத்த குழாய் வெடிப்பினால் மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஒரு பகுதியிலோ அல்லது முழுமை யாகவோ ஏற்படும் மூளை செயலிழப் பாகும். உலகளவில் உயிரிழப்புகளில், மாரடைப்புக்கு 2ஆவது காரணியாக பக்கவாதம் உள்ளது.
55 வயதுக்கு மேல் 5 பெண்களில் ஒருவருக்கும், 6 ஆண்களில் ஒருவ ருக்கும் வாழ்நாள் ஆபத்தாக இருக் கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 105 முதல் 152 பேருக்கு பக்க வாதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி அரசு மருத் துவமனையில் தலைமை மருத்துவர் தேரணிராஜன் தலைமையில் உலக பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
No comments:
Post a Comment