இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை

கொழும்பு, அக். 9- சுற்றுலா பயணிகளின் வருகைக்காக, இலங்கை தனது எல் லைகளை உலகுக்கு திறந்துவிட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பய ணிகள் வரலாம் என்று இலங்கை அறிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், கரோனா (ஆர்.டி.பி.சி.ஆர்.) பரி சோதனையில் வைரஸ் தொற்று இல்லை என சான்று வைத்திருப் பவர்கள், இலங்கை தலைநகர் கொழும்புக்கு வந்தவுடன் பரிசோ தனை செய்யவேண்டியது இல்லை. மேலும் பயணிகள் தனிமைப்படுத் திக் கொள்ள வேண்டியதும் இல்லை. பயணத்துக்கு, குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு ஒருவர் 2-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத் தியிருக்கவேண்டும்.

இந்த அறிவிப்பு சலுகை, சுற் றுலா பயணிகளுக்கான பயண விதி முறைகளை தளர்த்திய பிறகு, இந் தியாவில் உள்ள சுற்றுலா பயணிக ளுக்கு இலங்கையில் உள்ள பல இடங்களை ஆராய உதவும். இந் திய சுற்றுலா பயணிகளுக்காகசிறீ லங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனம்ஒன்று வாங்கினால் ஒன்று இல வசம்' என்ற சிறப்பு பயணச்சீட்டு சலுகையையும் அறிமுகம் செய்து உள்ளது.

No comments:

Post a Comment