தேசிய மனித உரிமைகள் ஆணையம்
புதுடில்லி, அக்.1- நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக, ஒன்றிய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில், மனித கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத் திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப் பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதக் கழிவுகளை அள்ளுதல், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது தேவையான கையுறைகள், தலைக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனவும் அருண்குமார் மிஸ்ரா அறிவுறுத்தி உள்ளார். இந்த கடி தத்தை ஒன்றிய அமைச்சரவையின் அனைத்து துறைகளுக்கும், மாநில தலைமைச் செய லாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் அறிவிப்பு
புதுடில்லி, அக்.1 மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. அந்த எண், 14567. இந்த எண் வழியாக மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டு தல்களையும் இலவசமாக பெற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 சதவீதம் பேர் அதாவது 300 மில்லிய னுக்கும் மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளுக் கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சந்திக்கும் பிரச்சினை களையும், சவால்களையும் நிவர்த்தி செய் வதற்கு நாடு முழுவதுமான இலவச உதவி மய்ய எண் வெளியிடப்பட்டிருக்கிறது. இது முதியோர் உதவி எண் என அழைக் கப்படுகிறது.
இந்த எண் வழியாக ஓய்வூதிய விஷ யங்கள், சட்ட சந்தேகங்கள், உணர்வுப்பூர்வ மான ஆதரவு போன்றவற்றின் வழிகாட்டு தல்களை இலவசமாக பெற முடியுமென அரசு தெரிவித்துள்ளது. தகவல்கள் மட்டுமன்றி, அத்துமீறல் பிரச்சினைகள் இருந்தாலும், இந்த உதவி மய்யம் அதை சரிசெய்யுமென சொல்லப்பட்டுள்ளது. வீடுகள் இன்றி தவிக்கும் முதியோரையும் இந்த உதவி மய்யம் மீட்டெடுத்து அடைக் கலம் கொடுக்குமாம்.
இதுதொடர்பாக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து குடிமக்களுக்கும் தேவையான தகவல் களையும், அன்றாட பிரச்சினைகளுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்குவதே இந்த முதியோர் உதவி எண்ணின் நோக்கமாகும். டாடா அறக்கட்டளை அமைப்பின் முயற்சியில், விஜயவாகினி அறக்கட்டளை யுடன் இணைந்து தெலங்கானா அரசு ஒத்துழைப்புடன் அய்தராபாத்தில் உள்ள முதியோர்களுக்கு உதவ கடந்த 2017ஆம் ஆண்டு இந்த முதியோர் உதவி மய்ய எண் தொடங்கப்பட்டது.
இன்று (30.9.2021) இந்த முதியோர் உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்ப டுத்த டாடா அறக்கட்டளையும், என்எஸ்இ அறக்கட்டளையும் ஒன்றிய அரசுடன் தொழில்நுட்பப் பங்குதாரராக இணைந் துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..
No comments:
Post a Comment