எல்லைப் பகுதிகளில் புதிய கான்கிரீட் கட்டடங்களை கட்டி வரும் சீனா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

எல்லைப் பகுதிகளில் புதிய கான்கிரீட் கட்டடங்களை கட்டி வரும் சீனா!

புதுடில்லி, அக். 17- கான்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உண்மையான எல்லை கோட்டுக்கு மிக அருகில் சீனா புதிய கான்கிரீட் கட்டடத்தை கட்டியுள் ளதன் பிரத்தியேக காட் சிகள் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லை பகு தியில் சீனா ஒரு ஆண் டுக்கும் மேலாக பதற் றத்தை ஏற்படுத்தி வருகி றது. எல்லை பகுதியில் 8 வெவ்வேறு இடங்களில் சீனா புதிய ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது. இதற்கு இந் தியா தரப்பில் கடும் கண் டனம் தெரிவிக்கப்பட் டது.

இருந்த போதிலும் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண் டுள்ள நிலையில் 13ஆவது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அப்போது எல்லை யில் ஆத்திரமூட்டும் நட வடிக்கையில் ஈடுபட மாட்டோம் என சீனா ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் கான்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சற்றே ஒரு கிலோ மீட்டர் தொலை வில் சீனா கான்கிரீட் கட் டடத்தை கட்டியுள்ளது. இதுபோன்று பல பகுதி களில் கட்டடம் கட்டப் பட்டு வருவதாகவும் தக வல் வெளியாகியுள்ளது. இதுஇந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment