நாசா அறிவிப்பு
வாசிங்டன், அக்.1 பூமியும், சிவப்புக் கோளான செவ்வாயும் சூரியனின் எதிர் பக்கங்களில் இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு நாசா செவ்வாய் கோளிற்கு அனுப்பிய விண்கலத்திற்கு கட்டளையிடுவதை நிறுத்திவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் - சூரிய இணைப்பு என்று அழைக்கப்படும் நிகழ்வு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது. இது இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 16 வரை நிகழ்கிறது. செவ்வாய்க் கோளில் ஆய்வு மேற்கொள்ளும் ரோவர் தனது பணியை தொடரும் அதே வேளையில், பூமியில் உள்ள விஞ்ஞானிகள் மூலம் அக்டோபர் 16 வரை அதற்கு கட்டளைகள் அனுப்பும் பணிகள் நிறுத்தப்படும் என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூரியனிடமிருந்து சூடான, அயனியாக்கப்பட்ட வாயு வெளியேறுகிறது, இது விண்வெளிக்கு வெகுதூரம் நீண்டுள்ளது. செவ்வாய்-சூரிய இணைப்பின் போது, பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று பார்க்க முடியாதபோது, செவ்வாய்க் கோளில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்பு கொள்ள முயன்றால் இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிடலாம். அது சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதத்திற்கு வழிவகுக்கும்.
மீண்டும் இணைப்பு தொடங்குவதற்கு முன், நாசா விஞ்ஞானிகள் செவ்வாயில் இருக்கும் விண்கலத்திற்கு சில வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய கட்டளைகளின் பட்டியலை அனுப்புவார்கள்.
“ செவ்வாய்க் கோளிற்கு அனுப்பிய விண்கலம் மற்றும் ரோவரின் செயல்பாடுகள் அடுத்த சில வாரங்களுக்கு தெரியவில்லை என்றாலும், அவை தங்கள் ஆரோக்கிய நிலையை எங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்” என்று நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மார்ஸ் ரிலே நெட்வொர்க்கின் மேலாளர் ராய் கிளாடன் கூறினார்.
No comments:
Post a Comment