மலைவாழ் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தருமபுரி, அக்.1 ஆதிதிராவிடர் பழங் குடி ஆணையம் சொல்லும் ஆலோ சனைகளை நிச்சயமாக நிறைவேற் றுவோம் என மலைவாழ் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் மலைவாழ் மக்கள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களுடன் முதல்-அமைச்சர் கலந்துரையா டும் நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மலை வாழ் மக்கள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந் துரையாடினார். அப்போது முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கரோனா பரவல் எந்த அளவுக்கு இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை கரோனாவை நாம் முழுமையாக ஒழித்து விட்டோம் என்று கூற மாட்டேன். ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். கரோனாவை கட்டுப்படுத்தியதே ஒரு சாதனைதான் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.
ஒரு பக்கம் மருத்துவ நெருக்கடி, இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி, இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். ஆனா லும் தேர்தல் நேரத்தில் நாம் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் பிறந்த நாளில், உணவுப் பங்கீட்டு அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கிய ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பது உங்க ளுக்கு தெரியும்.
தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை சொன்னோம். அந்த 505 வாக்குறுதி களில், நான் நெஞ்சை நிமிர்த்தி சொல் கிறேன், 202 வாக்குறுதிகளை நிறை வேற்றி முடித்திருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் படிப்படியாக நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றிக் கொடுப்போம் என்ற அந்த உறுதியை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும் புகிறேன்.
அதில் முக்கியமாக ஆதிதிராவிடர் பழங்குடி ஆணையம் அமைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். இத்தகைய ஆணையத்தை அமைத்து அதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டு வந்து, சட்டமன்றத்தில் அதை சட்ட மாக்கி இருக்கிறோம். மிக விரைவில் அதற்குரிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
இந்த ஆணையம் சொல்லக்கூடிய ஆலோசனைகளை எல்லாம் பரிசீலித்து நிச்சயமாக அவைகளை நிறை வேற்றுவோம் என்று நான் உங்களிடத் திலே உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்களிடம் உங்களுடைய கோரிக்கைகளை நீங்கள் சொல்ல வேண்டும். எல்லோருடைய கோரிக்கைகளையும் கேட்டு செயல் படுத்தக்கூடிய அரசுதான் இந்த அரசு.
பழங்குடி மக்களை, எங்களில் ஒருவ ராகத்தான் நான் உங்களை இன்றைக்கு சந்திக்க வந்திருக்கிறேன். உங்கள் முகத்தைப் பார்க்கும்போது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகிறது. எனவே, அந்த நம்பிக்கை யோடு உங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கான எல்லா வசதிகளை யும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்று வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 116 பேருக்கு 16 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரத்து 433 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் வகையில் 10 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக் கப்பட்டுள்ள கண்காட்சியை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பழங்குடியினருக்கு இலவச கறவைப் பசுக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிர மணியன், மக்களவை உறுப்பினர் செந் தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உள் பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment