அய்தராபாத்,அக்.14- “நீட்” தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் - அதனை ரத்து செய்திட, ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டுமெனவும் 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடிதம் எழுதினார்.
ஒடிசா
முதலமைச்சரிடம் அளிப்பு
“நீட்” தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் - அதனை ரத்து செய்திட, ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டுமெனவும் 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அறிவுறுத்தலின்படி,திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேற்று
(13.10.2021) ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தையும் - “நீட்” தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நிய மிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன்
குழு அளித்த பரிந்துரைகளையும் வழங்கினார்.
தெலங்கானா
அமைச்சரிடம்...
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க.
தலைவர் மு.க.ஸ்டாலின்
உத்தரவின்படி, திமுக செய்தி தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த 6.10.2021 அன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் - 11.10.2021 அன்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் அவர்களையும்
நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை
அளித்தார்.
அதனைத்
தொடர்ந்து, நேற்று (13.10.2021), காலை, தெலங்கானா மாநிலம், அய்தராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்
அவர்களின் மகனும் - மாநில தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ்
அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தையும் - “நீட்”
தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன்
குழு அளித்த பரிந்துரைகளையும் இணைத்து திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி. வழங்கினார். திமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும் - வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி உடனிருந்தார்.
No comments:
Post a Comment