ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

· கோயில்களில் பயன்பாட்டுக்கு இல்லாத தங்க நகைகளை 24 காரட் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கியில் பணம் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

· .பி. லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· நீட் தேர்வு ரத்து செய்திட ஆதரவு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற துணைத்தலைவர் கனிமொழி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் அளித்தார்.

· அதேபோன்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கலாநிதி வீராசாமி, தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவிடம் அளித்தனர்.

தி டெலிகிராப்:

· பிரிட்டிஷாரிடம் விடுதலை கோரி சாவர்க்கரின் மன்னிப்பு மனுக்கள் 1911 மற்றும் 1913 இல் கொடுக்கப்பட்டன. ஆனால் காந்தி 1915 இல் தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் நுழைந்தார். காந்தி கூறித்தான் சாவர்க்கார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் என்பது வரலாற்றுத் திரிபு என சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment