லக்னோ, அக்.17 வடமாநி லங்கள் முழுவதும் 15.10.2021 அன்று தசரா விழா என்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி பக்தர்கள் வழிபாடு நடத்தப்பட்ட துர்க்கை சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைத்தனர்.
அந்த வகையில் உத் தரப்பிரதேசத்தின் படாவுன் நகரை சேர்ந்த சிலர் கங்கை ஆற்றில் துர்க்கை சிலையை கரைக்க சென்றனர். அப்போது அவர் களில் சிலர் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற தால் நீரில் மூழ்கினர். இதில் 4 பக்தர்கள் பரிதாப மாக உயிரிழந்தனர். நீரில் தத்த ளித்தபடி உயிருக்குப் போராடிய 2 பேரை உட னிருந்தவர்கள் மீட்ட னர்.
இதே போல் பிரோ சாபாத் நகரில் யமுனை ஆற்றில் துர்க்கை சிலையை கரைக்கச் சென்ற 3 சிறு வர்கள் ஆற்றில் மூழ்கினர். அவர்களில் 12 வயது சிறுவன் உயிரற்று மீட்கப் பட்ட நிலையில், மற்ற 2 சிறுவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இதனிடையே ராஜஸ் தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள தாம்லவ்கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (16.10.2021) காலையில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென் றனர்.
அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென் றதால் நீரில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment