புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும்

மேனாள் முதலமைச்சர்

நாராயணசாமி கோரிக்கை

 

புதுச்சேரி அக் 14- புதுச்சேரி தேர்தல் ஆணை யரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மேனாள் முதலமைச்சர் நாராயண சாமி கூறி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது.  அது இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.  இதற்கு புதுச்சேரி மாநில தேர்தல் ஆணை யரே காரணம் என எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டி வருகின்றன.   இதையொட்டி அவர் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.   புதுச்சேரி மேனாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராய ணசாமி ஒரு காணொலி தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “உள்ளாட்சித் தேர்த லில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால், அது சமூக நீதிக்கு எதிரானது. ஏன் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த  முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார். அதற்கு விளக்கம் தரவேண்டும்.

அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசித்தும், சட்டமன்ற உறுப்பினர் களிடம் கருத்துக் கேட்டும் உள்ளாட்சித் தேர்தலைப்  புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.  புதுச் சேரி தேர்தல் ஆணையர்  தன்னிச்சையா கச் செயல்படுகிறார்.

ஆணையர் ராய் பி தாமசுக்குத் தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. வனத்துறை அதிகாரியை ஆணையராக நியமித்தது கிரண்பேடிதான். உச்சநீதி மன்றத்தில் தாமஸ் நியமனத்தை எதிர்த் துத் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணை யர் தன்னிச்சையாகச் செயல்பட்டதால், இரண்டு முறை தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு தடை உத்தரவு தரப்பட்டு உள்ளது. மாநில அரசுக்கு இது வெட்கக் கேடு. உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படக் காரணமானதற்குப் பொறுப்பு ஏற்று மாநில தேர்தல் ஆணை யர் பதவி விலக வேண்டும்.  அவர் அவ் வாறு செய்யாவிட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.”எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment