சென்னை,அக்.10- முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க நிர்வாகி களை இடைநீக்கம் செய்ய சங்கங் களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெரம்பூர் கூட்டுறவு கட்டட சங்கத் தலைவரான கிருஷ்ணமூர்த்தி என் பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சங்கத்துக்கு தேர்தல் நடத்தி அதன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகி யோர் முறைகேட்டில் ஈடுபட் டால்அவர்களிடம் விசாரணை நடத்தவும், பணி நீக்கம் செய்யவும் ஏற்கெனவே விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அவர் களை ஊதியம் பெறும் ஊழியர் களாக கருதி இடைநீக்கம் செய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட கூட்டுறவு சங்க சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர் வில் 7.10.2021 அன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் பி.எச்அரவிந்த்பாண்டியன், எல்.பி. சண்முக சுந்தரம் ஆகியோர் ஆஜ ராகி, “எம்பி, எம்எல்ஏக்கள் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி களை, அரசு அதிகாரிகள் இடை நீக்கம் செய்ய முடியாது. எனவே அதற்கு முரணாககொண்டுவரப் பட்ட சட்டதிருத்தம் செல்லாது என அறிவிக்க வேண் டும்” என்று வாதிட்டனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, “கூட்டுறவு சங்கங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவேஇது அரசமைப்பு சட்டத்துக்கு புறம் பானது எனக் கூற முடியாது” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அதிகாரமின்மை அடிப்படையிலும், அடிப்படை உரிமை மீறல் அடிப்படையிலும் மட்டுமே ஒரு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியும். தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை இடைநீக்கம் செய்ய சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி யதில் எந்த தவறும் இல்லை. கையாடல், நம்பிக்கை மோசடி, நிர்வாக குளறுபடிகள் தொடர்பான புகார்கள் எழும்போது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நடத்தும் விசாரணையில் ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருந் தால் மட்டுமே இடைநீக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்தில் தலைவர், துணைத் தலைவராக பதவி ஏற் பவர்கள் அதன் சட்டவிதிக்கு கட்டுப்பட வேண்டும். தேர்ந் தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சட்டத் துக்குப் புறம்பாகவிதிமீறலில் ஈடு பட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதன்படி இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டதில் எந்த தவறும் இல்லை” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment