சென்னை மண்டல கழக தலைவர் தி.இரா.இரத்தினசாமி அவர்கள் கடந்த வாரம் காலைப் பொழுதில் நடை பயிற்சியில்ஈடுபட்டு வந்த நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வலது கால்”முட்டி”பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவ ஆலோசனைப்படி இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.
அவரை நேற்று (30.10.2021) மதியம் 2 மணியளவில் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்செல்வன்,தாம்பரம் நகர செயலாளர் சு மோகன்ராஜ்,தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் ஆகியோர் நலம் விசாரித்தனர். ஓய்வில் உள்ள தி.இரா.இரத்தினசாமி விரைவில் நலம் பெற
வாழ்த்தினர்.
No comments:
Post a Comment