காரைக்கால்,
அக். 14- திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. முன்னதாக காரை மண்டல மாண வர் கழக தலைவர் மோ.மோகன்ராஜ் வரவேற்றார்.
மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையில், காரை மண்டல தலைவர் குல.கிருஷ்ணமூர்த்தி, மண்டல செயலாளர் பொன். பன்னீர்செல்வம், மண்டல இளை ஞரணி தலைவர் மு.பி.பெரியார்
கணபதி, மண்டல இளைஞரணி செயலாளர் ஜெ.செந்தமிழன், மண்டல
இளைஞரணி பொறுப் பாளர் ஆ.லூயிஸ்பியர் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
தொடக்கத்தில்
மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் மாணவ - மாணவிகள் மத்தியில் அறி முகத்தோடு பெரியாரால் வாழ் கிறோம், கல்வியும் வேளை வாய்ப் பும் பெற்றுள்ளோம் என்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என அறிவித்த முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்
களுக்கு நன்றி பாராட்டியும் பேசி னார்.
தொடர்ச்சியாக
கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் அவர்கள் சரவெடி போல் இடிமுழக்கத்துடன் தொடங்கினார். இங்கு
இந்த அரங்கத்தில் கல்லூரி மாணவர்கள் - மாணவிகளும் வந்துள்ளீர்கள். சரிக்கு சமமாக அமர்ந்துள்ளீர்கள், இதற்கெல்லாம் காரணம் பெரி யார். அனைவரும் எல்லா மாற்றத் தையும் ஏற்றுக்கொண்ட நீங்கள் மூடநம்பிக்கை என்கிற அந்த வியாதியிலிருந்து இன்னும் மாற வில்லையே என்றும் இதில் நாம் மாற்றம் பெற வேண்டும்.
இன்று
அண்ணா பிறந்த நாள். இந் நிலையை எதிர்த்து அண்ணா முன் வைத்த வாதத்தையும், சமூக நீதி நாளான தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிட திரு விழா வாக இல்லங்கள் தோறும் கொண் டாட வேண்டும் என சிறப்புரை யாற்றினார்.
நிகழ்வில்
புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப் பாளர் புதுவை அ.ச.தீனா,
காரை மண்டல
மகளிரணி பொறுப்பாளர் செ.சிறீதேவி மற்றும்
கழகத் தோழர்கள் அரசியல்கட்சி தோழர் கள் ஏராளமான மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டனர். இறுதியாக திராவிட மாணவர் கழக அமைப்பாளர் குணவாசன் நன்றி கூறினார்.
புதிய பொறுப்பாளர்கள்
மோ.மோகன்ராஜ் - மண்டல மாணவர் கழக தலைவர், கா.குண பாலன்
- மண்டல மாணவர் கழக செயலாளர், பி.பிலமோன், மண்டல
மாணவர் கழக அமைப் பாளர் காரைக்கால் கல்லூரி திராவிட மாணவர் கழகம், ரா.தினேஷ்குமார் - தலைவர்,
செ.சசிகுமார் - செயலாளர்.
No comments:
Post a Comment