செந்துறை,அக்.13- அரியலூர் மாவட்ட ப.க.தலைவரும் தமிழ்நாடு அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்றவருமான நல்லாசிரியர் தங்க.சிவமூர்த்திக்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா செந்துறையில் சிறப்பாக நடைபெற்றது.
9.10.2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் செந்துறை அருணா - பார்வதி திருமண மண்டபத்தில் நடை பெற்ற விழாவிற்கு மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலை மையேற்க, உதவி தோட்டக்கலை அலுவலர் மோகன்ராஜ் வரவேற்புரை யாற்றினார். மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன். து.தலைவர் தியாக.ரமேஷ், வனத்துறை அலுவலர் முத்துராசு, பேராசிரியர் ஆ.அருள், மாவட்ட கழக அமைப்பாளர் இரத்தின.இராமசந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. பொறியாளரணி துணை அமைப்பாளர் சிவ.பாஸ்கர், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் இராஜேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் கந்தசாமி, மண்டல இ.அ.செயலாளர் பொன்.செந்தில்குமார்.வி. சி. க.மாநில து.செயலாளர் ம.கருப்புசாமி. பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மு.ஞானமூர்த்தி, பூ.செல்வராஜ், மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தி.மு.க மாநில கொள்கைபரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தங்க.சிவ மூர்த்தியின் குணநலன்கள், ஆசிரியர் பணியின் சிறப்புகள், தலைமையாசிரியராக பள்ளி யின் வளர்ச்சிக்கு பாடுபட்ட விதம், பொதுநல தொண்டாற்றும் சிறப்பு, அவரது வாழ்விணையர் ஆசிரியர் சிவசக்தியோடு மேற்கொள்ளும் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.
நல்லாசிரியர் தங்க.சிவமூர்த்தி ஏற் புரை வழங்கி நன்றி கூறினார்.
மாவட்ட கழக கழகத்தின் சார்பில் ஆடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன்.மாவட்ட இ.அ. தலைவர் சு.அறிவன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் க.செந்தில், மாவட்ட தொழிலாளரணி வெ.இளவரசன், செந்துறை ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்செல்வன், ஆண்டிமடம் ஒன்றியதலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், து.தலைவர் இரா.எ இராம கிருட்டிணன், மீன் சுருட்டி தொழிலதிபர் ராஜா.அசோகன், தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரன்.பொன்பரப்பி வை.சுந்தரவடிவேல், 'சேடக்குடிக்காடு நீ.பெரியார் செல்வன், குமார், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் இரா.இராசேந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.. ராஜா,அயன் ஆத்தூர் க.கருப்பசாமி, மீன்சுருட்டி அ.சேக்கிழார், உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், நண்பர் களும், உறவினர்கள் நண்பர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment