கோவை, அக்.31 ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம் கோவையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த புத்தக நிலையம் கோவை மாநகரில் இருந்தாலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தக நிலையத்திற்கு பலரும் நேரில் வருகை தந்து கழக வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் கழகத் தோழர்கள் மூலமாக அல்லது சமுகவலைதளம், வாட்ஸ்சப் , மூலமாக ஏதோ ஒரு வகையில் அறிந்து கொண்டு புத்தக நிலையத்தை தொடர்பு கொள்ளும் புத்தக ஆர்வலர்களின் வேண்டுகோளையும் ஏற்று அவர்கள் விரும்பும் புத்தகங்களை அஞ்சல் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று
வருகிறது.
சில நேரங்களில் அலுவலகப் பணியில் உள்ள புத்தக ஆர்வலர்கள் அவசரமாக பல புத்தகங்கள் வேண்டும் ஆனால் தங்களால் நேரில் வர இயலாது என்பதை தெரிவிக்கும் போது உண்மையில் நேரில் வர இயலாத நிலையில் இருப்பவர்கள் என்றால் அவர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் நேரிலேயே சந்தித்து கழக வெளீயீடு கள் பரப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கோவை - பொள்ளாச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் பொள்ளாச்சி இமயவரம்பன் அவர்கள் புத்தக நிலைய பொறுப்பாளர் அ.மு.ராஜாவை தொடர்பு கொண்டு கழக வெளியீடான அறிவு விருந்து, இளைஞர்களுக்கு பெரியார் அறிவுரை, திராவிடம் வென்றது, தமிழனை அடிமையாக்கியவை எவை? ஆகிய புத்தகங்கள் என 150க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உடனடியாக வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று பொள்ளாச்சியில் வழக்குரைஞர் சங்கம் முன்பாக நேரில் சந்தித்து புத்தகங்களை வழங்கியபோது உரிய தொகையினை வழங்கி மகிழ்ச்சியுடன் புத்தகங்களை பெற்றுக்கொண்டார், திமுக வழக்குரைஞர் தோழர் ஜாபர் சாதிக் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment