கலைவாணரும் - கவிமணியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

கலைவாணரும் - கவிமணியும்


கவிமணி என்று போற்றப்பெறும் தேசிக விநாயகம் பிள்ளை நாஞ்சில்நாட்டு நற்றமிழ் கவிஞர் திண்ணிய அறிவும் பரந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் உடையவர் - வையாபுரிப்பிள்ளை: “இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து உண்மைப் பயிரை செழித்தோங்கச் செய்கின்றது. இவர் பாடல்களிலே காணும் தெளிவும் இனிமையும் இவரது உள்ளத்திலே உள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்.

கவிமணியிடம் தாங்கள் தொலைவில் இருந்தாலும் தம் உள்ளத்தை ஒன்றவைத்து அவர் நினைவாகவே இருந்தவர்களும், அடுத்தடுத்து கடிதங்கள் வழித் தொடர்பு வைத்துக் கொண்டவர்களுமான உயிரன்பர்கள் மிகப் பலராவர். அவர்களில் ஒருவர் கலைவாணர்.

அவர்தம் நண்பர்களுக்கு வரும் இன்ப துன்பங்களையும் தமக்கு வந்தனவாகக் கருதி உறவு கொண்டாடிய உயர் பண்புடையவராக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை விளங்கியிருக்கிறார்.

கடந்த நூற்றாண்டில் நாடக உலகிலும், திரையுலகிலும் பகுத்தறிவாளராகவும், சுயமரியாதைக் காரராகவும் விளங்கியவர் கலைவாணர். பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை நகைச்சுவையாலேயே எடுத்து மக்கள் மனதில் பதிய வைத்தவர். கலை மக்களுக்காகவே என்றும் திராவிட இயக்கக் கொள்கையில் பிறவாதவர் என்பதோடு நாஞ்சில் நாட்டவர்.

கலையுலகில் தன்மதியென விளங்கிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குக் கவிமணியிடம் எல்லையற்ற, கரை கடந்த அன்பு மிக மிக உயர்வான இடத்தில் மதித்துப் போற்றிய அவர் கவிமணியைத் தம் தந்தை போலவும், அதைவிட உயர்வாகவும் மதித்தார், போற்றினார்.

கவிமணியை அடிக்கடி சந்திக்கவும் உரையாடி மகிழவும் செய்தார். கலைவாணர் கலைவாழ்வின் உச்சத்தில் இருந்த வேளையில் அவர்தம் வாழ்வில் சோதனை ஏற்பட்டது. அவர் வாழ்வில் களங்கம் கற்பித்தனர். வழக்கு, கைது என வாழ்வில் சிக்கல்களுக்கு ஆளாயினார். நீதிமன்றத் தீர்ப்பு அவரை சிறைக் கோட்டம் புக வைத்தது.

முனைவர் பேராசிரியர் ..மங்களமுருகேசன்

அந்த வேளையில் கலைவாணருக்குப் பக்கத்துணையாக திராவிட இயக்கத்தவர் நின்றனர், உதவினர் எனில் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் துணை நின்றனர். தந்தை பெரியார்குடிஅரசிலும்‘, பேரறிஞர் அண்ணாதிராவிட நாட்டிலும்ஆதரவு காட்டி எழுதிய எழுத்துகள் எவரும் மறந்திட இயலாதவை.

ஆனால் அவரை கலைவாணர் என்றும் நகைச்சுவை மன்னர் என்றும், கொடை வள்ளல் என்றும் பாராட்டி வந்த பலர் புகழ்மாலை சூட்டிய பலர், அவரை ஒட்டி வாழ்ந்து, காசு, பணம் சேர்த்தவர்கள் ஆகியவர்களில் பலரும் அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல் அகன்று விட்டனர். அவர் தமக்கு நெருங்கியவர் என்று சொல்வார் சுருங்கி விட்டனர். குறை கூறவும், பழித்துப் பேசுவும் செய்தனர்.

உறுதியாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா எந்த அளவிற்குத் தங்கள் உள்ளமதில் வைத்திருந்தனரோ அந்த அளவிற்கு கவிமணி தம் உள்ளத்தில் அவர் உறவை நிலைநிறுத்தி இருந்தாரோ அன்றி ஒழித்து விடவில்லை.

கலைவாணர் குற்றமற்றவர், சூழ்ச்சிக்கு, வீண்பழிக்கு ஆளாகிவிட்டார் எனும் எண்ணமே கொண்டிருந்தார். அந்த எண்ணமும் அசைக்கமுடியாத எண்ணம். அதனால் கலைவாணருக்கு ஏற்பட்டுவிட்ட துன்பத்துக்காக இரங்கினார், ஏங்கினார்.

வஞ்ச வினை மலிந்த உலகில் நிலைகண்டுரைத்து மாழ்கினார் என்பது உண்மை. கலப்படமில்லா உண்மை.

அவர் தந்தை பெரியார் போலவோ, அண்ணா போலவோ இறை நம்பிக்கை அற்றவர் இல்லை; இறை நம்பிக்கை உடையவர். ஆனால் அதேவேளையில் ஜாதிக்கு எதிரானவர்.

காட்டும் கருணை உடையவரே - என்றும்

கண்ணிய வாழ்வை உடையவராம்

வாட்டும் உலகில் வருந்திடுவார் - இந்த

மர்மம் அறியாத மூடரையா

என்று பாடியவர் அவர்.

கவிமணிக்கும், தந்தை பெரியாருக்கும் கலைவாணருக்கு ஆதரவு காட்டியதில் மட்டுமல்லாது, உலகின் முதல் நாத்திகராம் புத்தரைப் போற்றியதிலும் ஓர் ஒற்றுமை காண்கிறோம்.

தந்தை பெரியார் புத்தரைப் போற்றியவர் என்பதோடு புத்த மாநாடுகள் நடத்தியவர். தந்தை பெரியாரின் புத்த ஈடுபாட்டை எடுத்து ரைக்கும்போதுமிகவும் புத்தி உடையவர் புத்தர்என்பார்.

அன்பின் கருணையின் வடிவான புத்தர் கவிமணியையும் கவர்ந்தவர். புத்தரை கருணைக் கடலாகக் கண்டார் கவிமணி. அவர் அருளமுதில் நோயற்று வெளிப்படுத்தின முதல் கவிதைகருணைக்கடல்”.

அதன் பின்னர்சித்தார்த்தன் துறவு”, “சித்தார்த்தன் வேட்ட தேவகீதம்“, “காதல் பிறந்த கதை”, “அருளுரிமைமுதலிய பலவும் ஒன்றாக வெளியிட்டார். இப்படிப் பிறந்தவை ஒன்பது பகுதிகள்.

நாமக்கல் கவிஞர் கவிமணியைத் தெரிந்து கூறும்போது

ஆசிய ஜோதியெனும் புத்தர் போதம்

அழகுத் தமிழில் சொன்னான் அதுபோதும்

என்று பாடியுள்ளார். எனவே கவிமணி குற்றமற்ற தம் அன்பருக்கு விடுதலை அளித்தருள வேண்டுமென்று ஆண்டவனிடம் மனம் உருகி வேண்டினார். கவிஞரல்லவா, உருகி கீர்த்தனைப் பாடல் இயற்றி வேண்டுகிறார் - கலைவாணர் விடுதலைக்கு இவ்வாறு: (இராகம் - தர்பார்; தாளம் - ஆதி)

பல்லவி

அய்யா நீ அருள் செய்ய வேண்டும் - உன்றன்

அடியினையன்றி வேறொரு துணை அறியேன்

(அய்யா)

அநுபல்லவி

ஒய்யார மாமயிலில் உல்லாசமாக வரும்

வையாபுரி முருகா மாயன் திருமுருகா

- அய்யா

சரணம்

வஞ்ச வினை மலியும் உலகில் - வாழும்

வழியறியாது நிதம் வருந்திடும் எளியேன்

அஞ்சி வந்துன்னையே அடைக்கலமாய்ப் புகுந்தேன்

அமரரைச் சிறை தவிர்த்தாண்டகுமரா? - என்

(அய்யா)

இதில்அய்யா நீ அருள் செய்ய வேண்டும் என வருகின்ற வேண்டுகோளும், அமரரைச் சிறை தவிர்த்தாண்டகுமராஎன்னும் கருத்துடையடை மொழியோடு கூடிய விளியும் கவிமணியின் உருகியோடிய மனநிலையைத் தெள்ளத்தெளியக் காட்டுவன.

இதில் ஒரு வேடிக்கை நாத்திகர் கலை வாணருக்கு விடுதலை வேண்டி இறைவனிடம் வேண்டுகிறார்.

இந்தக் கீர்த்தனை வேண்டுகோள் பாடலைக்கலைமகள்இதழுக்கு அனுப்பினார். கலைமகளிலும் வெளிவந்தது. இதை அப்படியே பார்த்தால் ஏதோ இறைவனிடம் வேண்டும் பாடலாகத் தோன்றலாம்.

கவிமணி தாம் எழுதிய பாடலை உரிமையுடையவர்கள் வழிக் கலைவாணருக்கு அனுப்பிவைத்து இதனை நாள்தோறும் பாடிப் பரவி முருகனை வழிப்பட்டு வருமாறும் கூறியிருக்கிறார். வழிபாட்டுக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ, கலைவாணர் அதனை ஏற்றதாகச் செய்தி இல்லை. ஆனால் சில நாட்களில் சிறையிலிருந்து கலைவாணர் விடுதலை ஆயினார்.

சிறையிலிருந்து வந்தவர் கவிமணி மீது கொண்ட அன்பின் பெருக்கத்தால் கண்ணாரக் கண்டு பணிந்தார்.

இந்தக் காட்சியை கவிமணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வித்துவான் செ.சதாசிவம்

குழவிப் பருவத்தில் பிரிந்த தன்னரும் புதல்வன் சீறுகளைக் காளைப் பருவத்தில் காண்கின்றாள். தாயான விசையைக் கண்டதும் அன்பு சுரக்க அடிகளில் வீழ்ந்தானை வாரியெடுத்து ஆரத்தழுவிக் கொள்கின்றாள். இதனைஅங்கிரண்டர் புமுன்னீர் அலைகடல் கலந்ததொத்தார்என்று குறிப்பிட்டார்.

சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் இம்மணி மொழியையே கவிமணி, கலைவாணர் சந்திப்புக் காட்சி நினைவூட்டுவதாகயிருந்ததுஇன்று பதிவு செய்துள்ளார்.

நிலை திரிந்த காலத்திலும்

மனம் திரியாத அன்புக்கடல்

கவிமணி என்பதற்காக இவ்வரலாறு எடுத்துக் காட்டப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு தனி சிறப்புடையது. முதலாவது சிறப்பு: தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்சமூகநீதி நாள்என்று அறிவித்த பெரும் சாதனை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது: பாரதிப் புலவர் மறைந்த நூற்றாண்டு. அதன் நினைவாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த 14 அறிவிப்புகள்.

அதுபோலவே கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் ..சியின் 150ஆவது பிறந்தநாள் விழாவும் தமிழ்நாடு அரசு அறிவித்த 14 அறிவிப்புகளும் ஆகும்.

1921ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி அமைந்த முதல் சட்டமன்றம் உருவான நூற்றாண்டு ஆகும். அந்த நூற்றாண்டின் நினைவாக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின்  படத்தை சட்டமன்றத்தில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திறந்து வைத்த நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்

ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும்

கண்ணீரில் தேடிப் பார்த்தாலும்

ஜாதி தெரிவதுண்டோ

என்று பாடிய கவிமணி தேசிய விநாயகம் மறைந்தது 26.9..1951 செப்டம்பர் நாளில் 65 ஆண்டுகளுக்கு முன் கவிமணி கவிதையால் சமூக மாற்றத்தை விதைத்தவர். தந்தை பெரியாரைப் போல் சமூகநீதியை முன்னிறுத்தி எழுதியவர். ஜாதிப் பாகுபாடுகள் மிக மிகக் கடுமையாக இருந்த சூழலில் தம் எழுத்தாணியால் விழிப்புணர்விற்கு நாற்று நட்டார்.

தந்தை பெரியார் எப்படிப் பெண்ணுரிமைக் காவலரோ அதுபோலவே பெண் குழுந்தைகள் பால் வெறுப்பு, தாழ்வு, அசூயை காட்டிய அன்றைய தலைமுறையின ருக்கு மட்டுமல்லாது, இன்றைய தலை முறையினருக்கும்மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என எழுதினார்.

எனவேதான் தந்தை பெரியாரின் பச்சை அட்டைகுடிஅரசுஏடு படித்துப் பகுத்தறிவாளராக விளங்கிய கலைவா ணருக்குப் பிடித்தவ ராய் விளங்கினார் கவிமணி.

அறிஞர் அண்ணா, மாணிக்கவாசகர் திரைப்படத்தில் தர்ப்பைப் புல்லை காட்டிப் பேசிய வசனத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணா, தாம் பல மேடைகளில் பேசி வலியுறுத்தும் கருத்தை, ஒரே பட வசனத்தில் பதிய வைத்து விட்டாரே என்று வியந்து தந்தை பெரியாருக்கு அறிமுகம் செய்தார்.  ஆசிய ஜோதிஎனும் தம் படைப்பில் ஓடும் உதிரத்தில் வடிந்து ஒழுகும் கண்ணீரில், தேடிப் பார்த்தாலும் ஜாதி தெரிவதுண்டோ அப்பா? எவர் உடம்பினிலும் சிவப்பே இரத்த நிறமப்பா! எவர் விழி நீர்க்கும் - உவர்ப்பே இயற்கைக் குணமப்பா!

எனத் தீண்டாமைச் சுவரை இடித்திடும், கவிமணி, இன்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன் அதே ஆசிய ஜோதியில், அடுத்துத் தரும் வரிகள் புரட்சியின் வேர்கள், புத்தர் காவியத்தில் பொருத்தமாக நுழைந்தவை.

நெற்றியில் நீறும் - மார்பில் நீண்ட பூணூலும்

பெற்று இவ்வுலகுதனில் - எவரும் பிறந்த துண்டோ?அப்பா நீறும் - திருநீறும் பிறப்பினால் உலகில் எவர்க்கும் பெருமை வராதப்பா!

சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேண்டுமப்பா!

நன்மை செய்பவரே உலகம் நாடும்; மேற்குலத்தார் - தின்மை செய்பவரே அண்டித்  தீண்ட ஒண்ணாதார்.

 இதனை எதற்காகச் சொன்னார், புத்தபிரான் கலத்தில் பாலைக் கறந்து தரவேண்டிய போது அவருக்கு உதவிட வந்த இடையர் குலத்துச் சிறுவன்அண்ணலே உனைக் கையினால் தீண்டவொண்ணா - இடையன் ஒரு காட்டு மனிதன்என்றபோது, அண்ணல் புத்தர் உணரத்தலையாகக் கூறுகிறார் கவிமணி.

இதுபோன்ற சிந்தனை விதை விதைத்த கவிமணி, கலைவாணரைத் தந்தை பெரியார் போல் கவர்ந்தது வியப்பில்லை.

எனவே எப்போது நாகர்கோவிலுக்கு வந்தாலும் கலைவாணரும், செந்தமிழ் விரலி மதுரம் அம்மையாரும், தேரூர் சிற்றூர் வந்து கவிமணியைக் காணாமல் சென்றதில்லை. என உறுதிபடக் கூறுகிறார் கவிமணியின் பேரன் கல்லூரிப் பேராசிரியர் குற்றாலம் என்பவர்.

மேலும் ஒன்று தந்தை பெரியார் போல் பதவியை - தன் வீட்டுத் தாழ்வாரத்தில் வந்து வீழ்ந்த, சென்னை மாநிலம் ஆளும் பதவியைக் கூட ஏற்காத தந்தை பெரியாரைப் போல், கவிமணிக்கு அரசவைப் புலவர் பதவி வழங்க, அன்றைய அரசு விரும்பியபோது, தம்மைக் காட்டிலும் நாமக்கல் கவிஞரே பொருத்தமானவர் என்று கூறி அவரை அப்பதவியில் அமர்த்திட வகை செய்தார் எனவும் அறிகிறோம்.

ஜாதிச் சண்டையைக் கண்டிக்கும் வண்ணம்.

கீரியும் பாம்புமாய் சண்டையிட்டு ஜாதிகீழ்என்றும், ‘மேல்என்றும் நாட்டிவிட்டுப் பாரதத்தாய் மக்கள் என்று நிதம் பல்லவி பாடிப் பயன் எதுவும் இல்லைஎன்பதும் ஜாதியைக் கண்டித்துச் சினத்தோடு பாடிய வரிகள் இவை.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 24.12.1940இல் அதாவது தந்தை பெரியார், ‘பெரியார்பட்டம் பெற்ற இரண்டாண்டுகளுக்குப் பின் தமிழவேள் உமா மகேசுவரர் அளித்தகவிமணிஎனும் பட்டமே கடைசி வரை நிலைத்தது.

No comments:

Post a Comment