சென்னை, அக்.14 இந்தியாவின் முதல் மனநல சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை அய்டிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி, பான்யன் அகாடமி ஆஃப் லீடர்ஷிப் உடன் இணைந்து துவங்குவதாக அறிவித்துள்ளது. மனநல ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனநல ஆரோக்கியத்தை புதிய ஆராய்ச்சிகளின் மூலம் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி உலக மனநல தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த முன்முயற்சியின் மூலம், ஆராய்ச்சி மய்யம் மன நலம் குறித்த புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி, நகர்ப்புற மற்றும் அடித்தட்டு மட்டத்தில் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளது.
இது
குறித்து கார்ப்பரேட் சமூக பொறுப்பு, அய்டிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி தலைவர் ரச்சனா கூறுகையில், நோய், தனிமைப்படுத்தல், நேசிப்பவரின் இழப்பு, வேலை இழப்பு மற்றும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட பிற சம்பவங்களால் ஏற்படும் அதிர்ச்சியை அனைத்து தரப்பு மக்களும் அனுபவிப்பதால், மனநலப் பராமரிப்புக்கான இடைவெளி முன்பை விட இப்போது அதிகமாக உள்ளது. இந்தியாவில் அதிர்ச்சி பராமரிப்பு அமைப்புகள் ஆரம்ப நிலையில் உள்ளன. வங்கியில், இந்த இடைவெளிகளைக் குறைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், இதனால் சிறு நகரங்களை சேர்ந்த நோயாளிகளுக்கு மனநலப் பராமரிப்புக்கான சிறந்த அணுகல் எளிதில் கிடைக்கும். மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் எங்கள் முயற்சிகளை புதிதாக துவங்கியுள்ள இந்த மய்யம் வலுப்படுத்தும் என்று கூறினார்.
No comments:
Post a Comment