மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சாதனை

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 மற்றும் 24, ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் நீச்சல் சங்கம் நடத்திய கேம்ஸ் வில்லா கோப்பைக்கான போட்டி அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக பி.பி. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ஜெ.ஜாசிறீ  மாநில அளவில் கலந்து கொண்டு, நான்கு தங்க பதக்கங்களையும் தனி நபர் வாகையர் பட்டத்தையும் வென்றார். இப்போட்டியில் பதக்கம் பெற்ற மாணவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், உடற்கல்வி இயக்குநர், முதன்மையர்கள் பேராசிரியர்கள்,  ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment