மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
செப்டம்பர் 29 விடுதலை நாளிதழில் வெளியான பெரியார் உலகத்தில் பூமி பூஜையா, சங்கிகள் பரப்பும் புரட்டு கட்டுரை வாசித்தேன்.
தந்தைபெரியாரும், அவரின் கொள்கைகளும் வென்று வருவதை பார்ப்பனர்களாலும், தமிழ்இனம் என்று சொல்லிக் கொண்டு சினம் காட்டும் துரோகிகளாலும் சகிக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடு தான் சமூக ஊடகத்தில், பெரியார் உலகத்தில் பூமிபூஜை பற்றிய செய்தி.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ( நாம் இதை ஏற்பதில்லை) என்பது போல கருப்பு சட்டையை கண்டவுடன் பெரியாரும், திராவிடர் கழகமும் தான் இவர்களின் கண்களுக்கு தெரிகிறது, உறுத்துகிறது.
எந்நிலையிலும் கருப்பு உடையை தாங்குவதில் தான் கொண்ட கொள்கையின் உறுதி புலப்படும், பலப்படும் என்பதற்கு தானே அய்யா அவர்கள் கருப்பு சட்டையை தேர்ந்தெடுத்தார். இப்படி பெருமைமிகு கருப்பு சட்டையை பார்த்து மிரள்வது வியப்பில்லை.
நீதியை நிலைநாட்டுவதும், தவறை திருத்தி நிவர்த்தி செய்வதும் கருப்பு சட்டை தான் (நீதிமன்றத்தின் உடை)
அதுபோல நாட்டில் மூடநம்பிக்கை ஒழித்து, சமூக நீதியை நிலை நிறுத்த போராடுவது திராவிடர் கழகத்தின் கருப்பு சட்டை தான். விதிவிலக்காக அய்யப்ப பக்தர்கள் கருப்பு சட்டையை அணிவது நிரந்தரமாக அல்ல, தற்காலிகமானது, ஏனெனில் அவர்களுக்கு கொள்கையோ , பற்றோ கிடையாது. சில நாட்கள் மட்டும் உத்தம வேடம் அதை மெய்ப்பிக்கவும் கருப்பு தான் பயன்படுகிறது.
இன ஈனமலர் மற்றும் பார்ப்பன ஏடுகள் வெட்கமில்லாமல் இன்னும் "பெரியார் உலகம்" என எழுதாமல், சிலைக்கு இவ்வளவு தொகையா என்று பூணூலை பிடித்துக் கொண்டு உண்மைக்கு மாறாக எழுதுகின்றன.
தமிழ்நாட்டில் வெல்வதற்கும் அய்யா தேவை, எதிரிகள், துரோகிகளை எதிர்ப்பதற்கும் அய்யா தான் தேவைப்படுகிறார்.
அய்யா இன்றும் கொள்கையாக வாழ்கிறார், வெல்கிறார், ஆள்கிறார் என்பதே உண்மை.
சமூக ஊடகங்களில் அய்யா அவர்களைப்பற்றி விமர்சனங்களை வெளியிட்டு எதிரிகளைவிட துரோகிகள் மகிழ்கிறார்கள்.
கொள்கை உறுதி மிக்கவர்கள் நம் கழகத்தவர்கள் என்பதை எதிரி, துரோகி களுக்கு உணர்த்துவது தான் அய்யாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். சமூக ஊடகங்களில் அய்யா பற்றிய தகவல்களை நாம் அதிகம் பரப்பவேண்டும்
பகுத்தறிவு வெல்லட்டும்
பார் போற்றும் வெண்தாடிவேந்தரின் சுடரொளி யால் பொய்மைகளையும், மூட நம்பிக்கைகளையும் எரித்திடுவோம் எந் நளும் வெல்லட்டும் அய்யாவின் கொள்கை.
மு. சு. அன்புமணி, மதுரை
No comments:
Post a Comment