ஜெனிவா, அக். 16- 'உலக அளவில் கோவிட் தொற் றால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அள வுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப் பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், வாராந்திர ஆய்வு குறித்து அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது: உலக அளவில் கோவிட் பெருந்தொற்றால் உயிரி ழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத் தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்த னர். இது, கடந்த ஓராண் டில் ஒரு வாரத்தில் ஏற் பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு.
அய்ரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல் வேறு நாடுகளிலும் கோவிட் தொற்றால் உயிரிழப் போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பல நாடுகள் தற்போது புதி தாக கோவிட் அலைக ளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, குறைவான அளவு தடுப்பூசி செலுத் திய மக்கள் இருக்கும் நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment