புதுடில்லி, அக்.17 ‘நேரில் கண்ட சாட்சிகளின் வாக்கு மூலம் தாமதமாக பாதியப்பட்ட காரணத்திற்காக, அதை நிராகரிக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை வழக்கில் 4 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், ‘‘நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்ய ஏற்படும் தாமதத்தால், அந்த வாக்குமூலத்தையே நிராகரித்து விட முடியாது. சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் போதுமான அளவு விளக்கப்பட்டுள்ளது. எனவே, கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும்,’’ என உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment