டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· குஜராத் காந்திதாம் அருகில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் ராமன் கோயிலுக்கு சென்றதற்காக தாக்கப்பட்டுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· தெலங்கானா ஹூசூராபாத் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.6000 பணத்தை ஓர் அரசியல் கட்சி கொடுத்ததாகவும், தங்களுக்கு பணம் கொடுக்க வில்லை எனக் கூறி அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி இந்து:
· புதிய கல்விக் கொள்கை, 2020இன் அடிப்படையில் பயிற்சித் திட்டத்திற்கான ஆசிரியர்களின் விவரங்களைக் கோரி ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சலில் “ஒருதலைப்பட்சமாக” சுற்றறிக்கை அனுப்பிய கல்வித்துறை இணை இயக்குநரை இடமாற்றம் செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிராக அதிகாரி செயல்பட்டுள்ளார் என அமைச்சர் கூறினார்.
தி டெலிகிராப்:
· கருநாடக மாநிலத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர ஏதுவாக, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மதமாற்றம் குறித்த தரவுகளை சமர்ப்பிக்குமாறு சிறுபான்மையினர் நலத் துறையிடம் சட்டப்பேரவை செயலகம் கோரியுள்ளது.
· பேஸ்புக் நிறுவனம் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றுகிறது
· “தலைமைச் சதிகாரர்” வினோத் ராயின் “பொய்கள்” அம்பலமானது. மன்மோகன் சிங் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதிலும், நரேந்திர மோடியின் பதவி உயர்வுக்கு உதவுவதிலும் நோக்கமாகக் கொண்டே அவருடன் இணைந்து அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி போன்றவர்களை அம்பலப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி, தங்கள் சமூக மக்களை கோயிலில் அன்னதான உணவை உண்ண அனுமதிக்கவில்லை என்று கோபமடைந்த சில நாள்களுக்குப் பிறகு அவர்களுடன் உணவு சாப்பிட்டார். இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் பழங்குடியின (நரிக்குறவர்) சமுதாய மக்களுடனும் உணவு சாப்பிட்டார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment