சென்னை, அக்.1 ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது'' தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறு வோருக்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ‘‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது'' வழங்கு வதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப் பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்ப தாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 31.10.2021-க்குள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்கலாமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.விஜயாராணி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment